பதிவு செய்த நாள்
11 ஏப்2016
07:19

பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறு முதலீட்டாளர்கள் பங்கு பரிவர்த்தனை தொடர்பான சரியான தகவல்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டுவதோடு, பொய்யான விவரங்கள் குறித்தும் விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். பங்குகள் தொடர்பான பொய்யான தகவல்களை பரப்பி முதலீட்டாளர்கள் மத்தியில் செயற்கையான ஆர்வத்தை உண்டாக்கி லாபம் பார்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதே இதற்கு காரணம்.
பங்குச்சந்தை தொடர்பான தவறான விவரங்களை பரப்புபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ’செபி’ தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், மோசடி ஆசாமிகள் சிறு முதலீட்டாளர்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இணையதளம், இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம் பங்குகள் பற்றிய குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் இதை செய்து வருகின்றனர்.
போலி இணைய முகவரிஇதே போல அண்மையில் டோட்டல் எக்ஸ்போர்ட்ஸ் எனும் அதிகம் அறியப்படாத நிறுவன பங்குகள் மீது திடீரென ஆர்வத்தை ஏற்படுத்தினர். பிரபலமான நிதி இணையதளம் ஒன்றின் முகவரி போலவே. ஆனால், பிழையான முகவரியில் ஒரு இணையதளம் அமைத்து அந்த நிறுவன பங்குகள் இன்போசிஸ் நிறுவனத்தால் வாங்கப்பட இருப்பதாக செய்தியை பரப்பினர். இதனால் அந்த நிறுவன பங்குகள் மீது ஆர்வம் உண்டாகி அதன் விலையும் உயர்ந்தது. சிறு முதலீட்டாளர்கள் பலர் அந்த பங்குகளை வாங்கினர். ஆனால், அந்த செய்தி பொய்யானது என தெரியவர பங்கின் விலை சரிந்துவிட்டது.
வல்லுனர்கள் எச்சரிக்கைமோசடி ஆசாமிகள் இதை ஒரு உத்தியாகவே வைத்திருப்பதாக பங்குச்சந்தை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அதிகம் அறியப்படாத நிறுவன பங்கை தேர்வு செய்து, அந்நிறுவனம் தொடர்பான நல்ல செய்தியை வதந்தியாக பரப்பி பின்னர் தங்களுக்குள் அதன் பங்குகளை வாங்கி, ஆர்வத்தை உண்டாக்குகின்றனர். இப்படி திடீரென கவனம் பெரும் பங்குகளை சிறு முதலீட்டாளர்களும் ஏமாந்து வாங்கி விடுகின்றனர். இதற்குள் மோசடி ஆசாமிகள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்று லாபம் பார்த்து விடுகின்றனர்.
ஆய்வு அவசியம்அவ்வப்போது நடைபெறும் இந்த ஏமாற்று உத்திக்கு பலியாகாமல் இருக்க, வதந்திகளை நம்பி பங்குகளை வாங்கக்கூடாது என்று வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். அதிக அளவில் பரிவர்த்தனை செய்யப்படும் பங்குகளை, சரியான ஆலோசனை அடிப்படையில் வாங்க வேண்டும் என்கின்றனர். அதை விட முக்கியமாக திடீரென தெரிய வரும் ஆலோசனை அடிப்படையில் பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். அடிப்படையான காரணங்கள் இல்லாமல் ஒரு பங்கு விலை அதிகரிக்கிறது என்றால் சந்தேகம் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர். பங்கு தொடர்பான முறையான ஆய்வை மேற்கொண்ட பிறகே வாங்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|