பதிவு செய்த நாள்
11 ஏப்2016
07:22

ஆரம்ப கட்டத்தில் இருந்தே சேமிக்கத்துவங்குவது மற்றும் சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிகளை கண்டறிவதன் மூலம் நீண்ட கால நோக்கில் சேமிப்பின் முழு பலனை பெறலாம் என வலியுறுத்துகிறார் நிக் லவுத். பணத்தை பெருக்கும் வழிகளை விவரிக்கும் வகையில் இவர் எழுதிய மல்டிபிளை யுவர் மணி புத்தகத்தில் பங்குகள், ஓய்வூதியம், கடன் என பலவிஷயங்கள் பற்றி விவரித்திருந்தாலும் சேமிப்பின் அருமையை குறிப்பாக வலியுறுத்தியுள்ளார்;
வளத்தை நோக்கி உங்களை அழைத்துச்செல்லக்கூடிய முதலீட்டு வாகனத்தை பெற விரும்பினால் நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது சீக்கிரம் துவங்குவதாகும். மாறாக தாமதமாக சேமிக்கத்துவங்கினால் இலக்கை அடைய அந்த அளவு தாமதமாகும்.
நீங்கள் உணர வேண்டிய மற்றொரு விஷயம் காலத்தின் அருமை. அதாவது சேமிப்பு வளர்ந்து பயன் தர அதற்கான அவகாசம் தேவை. நீண்ட கால முதலீடு என்பது மரம் வைப்பது போன்றது. முதல் சில ஆண்டுகளில் அது சின்ன செடியாக தான் இருக்கும். சில ஆண்டுகளில் அதை நீங்கள் மறக்கவும் செய்யலாம். ஆனால் ஒரு நாள் ஜன்னல் வழியாக பார்த்தால் செடி வளர்ந்து மரமாகி இருக்கும். சேமிப்பின் பலனும் இது போன்றது தான்.
இதற்கு, ஆரம்பத்தில் இருந்தே சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது போலவே முதலீட்டின் வளர்ச்சியும் மிகவும் முக்கியமாகும். நீண்ட கால முதலீட்டைப்பொருத்தவரை சிறிய அளவிலான வட்டி விகித வேறுபாடு கூட கூடுதல் பலன் அளிக்க கூடியது. எனவே முதலீட்டில் வளர்ச்சி மிகவும் முக்கியம். மேலும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு மீதான பராமரிப்பு செலவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக பலன் தரும் ரிஸ்கான முதலீடுகளில் கவனம் செலுத்துவதை விட, குறைந்த செலவிலான முதலீட்டில் கவனம் செலுத்துவது நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும்.
அதே போல சேமித்து வைக்கும் பணத்தை தனியே விட்டுவிட வேண்டும். இதன் பொருள் இடையே ஏற்படும் தேவைகளுக்கு அந்த பணத்தில் கை வைக்காமல் இருக்க வேண்டும். இப்படி விட்டுவைக்கும் போது தான் பணம் நமக்காக வேலை செய்து பலன் அளிப்பது சாத்தியம். ஆனால் அதற்கு முன் ஒருவர், தனது தேவைகள் மற்றும் நிதி நிலையை ஆய்வு செய்து எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும் என தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இந்த தீர்மானத்தில் உறுதியாகவும் இருக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு என்று ஒரு தொகையை சேமித்து வர வேண்டும். இல்லை என்றால் நெருக்கடியான காலங்களில் முதலீட்டை நஷ்டத்திற்கு விற்க வேண்டி வரலாம்.
இந்த விஷயங்களுடன் பணவீக்கத்தையும் மறக்காமல் இருக்க வேண்டும். சேமிப்பின் உண்மையான எதிர்கால பலனை கணக்கிடும் போது பணவீக்கத்தை தாக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதிக பணவீக்கம் சேமிப்பின் பலனை அழித்துவிடக்கூடியது. குறைந்த அளவிலான பணவீக்கம் கூட நீண்டகால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பணவீக்கத்திற்கு ஈடு கொடுக்க கூடிய வகையில் சேமிப்பு முதலீடும் அமைய வேண்டும்.இதை திட்டமிடுவதற்கு அடிப்படையான புரிதல் போதுமானது. ஆரம்பத்தில் துவங்கி, சேமிப்பை தொடாமல் இருந்தாலே போதுமானது. சேமிப்பு தன் கடமையை சரியாக செய்து பலன் அளிக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|