தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும்தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
07:24

உங்கள் வரு­மா­னத்தின் ஒரு பகுதி சேமிப்­பாக இருக்க வேண்டும். ஆனால், செல­வுகள் அதி­க­ரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என பலர் நினைக்­கலாம். இதற்­காக சேமிப்பே சாத்­தி­ய­மில்லை என நினைக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றி யோசித்­தாலே போது­மா­னது. அதா­வது சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வழி­களை கண்­ட­றிய வேண்டும். அதென்ன சேமிக்க கூடிய வரு­மானம்? வரு­மா­னத்தில் மொத்த வரு­மானம், கைக்கு வரும் வரு­மானம் என இருப்­பது போல, மாத செல­வுகள் போக மிஞ்சும் வரு­மானம் தான் சேமிக்க கூடிய வரு­மானம். இது தான் சேமிப்­பாக மாறு­கி­றது. ஆக அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­மாக்க வேண்டும். இதற்கு செல­வு­களை குறைக்க வேண்டும். செல­வு­களை குறைக்க வழி­களை கண்­ட­றிய முடிந்தால் இப்­போ­தைய ஊதி­யத்­தி­லேயே சேமிப்­பது சாத்­தி­ய­மாகும்.
வரிகள் பலவிதம்வரு­மான வரி, சொத்து வரி, சேவை வரி என பல­வி­த­மான வரி­களை நாம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. இவை தவிர கலால் வரி, மூல­தன ஆதாய வரி, வாட் வரி உள்­ளிட்ட வரி விதிப்­பு­களும் இருக்­கின்­றன. இவற்றில் ஒரு சில வரிகள் பர­வ­லாக அறி­யப்­ப­டாமல் இருப்­ப­தோடு, எந்த வரி எதற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது என்­பதும் புரி­யாமல் இருக்­கலாம். மேலும் வரி வசூ­லிக்கும் அமைப்பு தொடர்­பான குழப்­பமும் இருக்­கலாம். இந்­தி­யாவில் செலுத்­தப்­பட வேண்­டிய வரிகள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி ஒரு பார்வை;
இரு வகை வரிகள்பொது­வாக வரிகள் இரண்டு வகைப்­படும். நேரடி வரி மற்றும் மறை­முக வரி என இவை குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. நேர­டி­யாக அரசு அல்­லது அரசு அமைப்­புக்கு செலுத்­தப்­படும் வரி நேரடி வரி என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. வரு­மான வரி இதற்­கான உதா­ரணம். வரி செலுத்­து­ப­வரை அதிகம் பாதிப்­பதும் நேரடி வரி தான். உற்­பத்­தி­யா­ளர்கள் அல்­லது இடைப்­பட்ட அமைப்­புகள் மூலம் அரசால் வசூ­லி­கப்­படும் வரிகள் மறை­முக வரிகள் என குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இந்த வரிகள் நுகர்­வோ­ரிடம் இருந்து பெறப்­பட்டு அர­சுக்கு செலுத்­தப்­ப­டு­கின்றன். சேவை வரி இதற்­கான உதா­ரணம். ஏ.சி., ரெஸ்­டாரண்ட் போன்­ற­வற்றில் பெறப்­படும் சேவை வரி அர­சுக்கு செலுத்­தப்­ப­டு­கி­றது.
முக்­கிய வரிகள்வரு­மான வரி; தனி­நபர் அல்­லது வர்த்­தக நிறு­வ­னங்கள் வரு­மா­னம் மீது செலுத்தும் வரி.வரு­மான வரிக்­கான வரு­மானம் ஐந்து வகை­யான பிரிக்­கப்­ப­டு­கி­றது; ஊதியம், வீட்டு வாடகை, வர்த்­தக வரு­மானம், மூல­தன ஆதாயம் மற்றும் வைப்பு நிதி வட்டி போன்­ற இதர வரு­மானம்.வாட் வரி: மாநி­லத்தில் விற்­கப்­படும் பொருட்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி.சேவை வரி: 1994 முதல் சேவைகள் மீது விதிக்­கப்­படும் வரி. கலால் வரி: உற்­பத்தி செய்­யப்­படும் பொருட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.சுங்க வரி: இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான வரிதொழில்­முறை வரி: ஊழி­யர், ஒரு சில தொழில் வல்­லு­னர்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி. மூல­தன ஆதாய வரி: சொத்து, வாகனம், நகைகள், நிலம், பத்­தி­ரங்கள் போன்­ற­வற்றை விற்­பனை செய்யும் போது அதன் ஆதாயம் மீது விதிக்­கப்­படும் வரி.பொழு­து­போக்கு வரி: சினிமா மற்றும் இதர பொழு­து­போக்கு டிக்­கெட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.முத்­திரை தாள் கட்­டணம்: பத்­திர பதிவு போன்­ற­வற்றின் போது செலுத்­தப்­ப­டு­வது. சொத்து வரி: உள்­ளாட்சி அமைப்பால் ஆண்­டு­தோறும் வீட்டு உரி­மை­யா­ள­ரிடம் இருந்து பெறப்­ப­டு­வது.
மத்­திய, மாநில வரிகள்இந்­தி­யாவில் விதிக்­கப்­படும் வரிகள் பொது­வாக மத்­திய அரசு, மாநில அர­சுகள் மற்றும் உள்­ளாட்சி அமைப்­பு­களால் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு சில வரிகள் நேர­டி­யாக மத்­திய அர­சுக்கு செல்­கின்­றன. சில வரிகள் மாநில அர­சுக்கு செல்­கின்­றன. மத்­திய அரசு வரிகள்: வரு­மா­ன­ வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி.மாநில அரசு வரிகள்:விற்­பனை வரி, வாட், பொழு­து­போக்கு வரி, டோல் கட்­டணம், தொழில்­முறை வரி, முத்­தி­ரைத்தாள் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி, மூல­தன ஆதாய வரி.உள்­ளாட்சி அமைப்பு வரிகள்: சொத்து வரி.
இதர வரிகள்இவை தவிர ஈவுத்­தொகை வினியோக வரி, டோல் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி உள்­ளிட்­ட­வையும் பொருத்­த­மான இடங்­களில் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)