தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும்தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய நிதியாண்டில் நீங்கள் செய்ய வேண்டியவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
07:25

நிதி­யாண்டின் துவக்கம் நிதி திட்­ட­மி­டலை ஆய்வு செய்து, தேவை­யான மாற்­றங்­களை மேற்­கொள்ள சரி­யான தரு­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்த நிதி­யாண்­டிற்­கான நிதி திட்­ட­மி­டலில் கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்கள்:
வட்டி விகித குறைப்பு, வட்டி விகித கணக்­கீடு முறையில் மாற்றம் என புதிய நிதி­யாண்டு மாற்­றங்­க­ளுடன் பிறந்­தி­ருக்­கி­றது. இதற்கு முன்னர் சிறு­சே­மிப்­பிற்­கான வட்டி விகிதம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றங்கள் உங்­களின் சேமிப்பு, முத­லீடு இரண்­டி­லுமே தாக்­கத்தை செலுத்தும் நிலையில் நிதி திட்­ட­மி­டலை ஆய்வு செய்­வ­தற்­கான சரி­யான தரு­ண­மாக இது அமை­கி­றது. வட்டி குறைப்பு கட­னுக்­கான வட்டி விகி­தத்தை குறைக்க வாய்ப்­புள்ள சூழலில் சேமிப்பு மற்றும் டிபாசிட் மீதான வட்­டியும் குறைய வாய்ப்­புள்­ளது. இந்த பின்­ன­ணியில் ஒருவர் தனது நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப மாற்­றங்கள் செய்­வ­தோடு புதிய இலக்­குகள் இருந்தால் அதற்­கேற்ப திட்­ட­மிட வேண்டும்.
வரி திட்­ட­மிடல்வரி திட்­ட­மிடல் காலம் இப்­போது தான் முடிந்த நிலையில் அதற்குள் மீண்டும் வரி திட்­ட­மி­டலா என பலரும் நினைக்­கலாம். ஆனால், வரி திட்­ட­மி­டலை நிதி­யாண்டின் கடைசி பகு­திக்கு கொண்டு செல்­வதை விட துவக்­கத்­தி­லேயே திட்­ட­மி­டு­வது ஏற்­ற­தாக இருக்கும் என்று நிதி ஆலோ­ச­கர்கள் அறி­வு­றுத்­து­கின்­றனர். வரு­மான வரி விலக்­கிற்­கான 80வது சி பிரிவின் கீழ் முத­லீ­டு­களை எப்­படி பயன்­ப­டுத்­திக்­கொள்­வது என்று திட்­ட­மிட வேண்டும்.துவக்­கத்­தி­லேயே இவற்றை செய்­வதன் மூலம், கடைசி நேரத்தில் அல்­லா­டு­வதை தவிர்ப்­ப­தோடு, முத­லீட்­டிற்­கான பலனை ஆண்டு முழு­வதும் பெறு­வதும் சாத்­தி­ய­மாகும் என்று நிதி ஆலோ­ச­கர்கள் கூறு­கின்­றனர். மேலும் கடைசி நேரத்தில் வரிச்­ச­லு­கைக்­காக தவ­றான முத­லீட்டை மேற்­கொ­ள்­வ­தையும் இதன் மூலம் தவிர்க்­கலாம். அதே போலவே வரி தொடர்­பான ஆவ­ணங்­க­ளையும் சேக­ரித்து வைப்­பது நல்­லது. வீட்­டுக்­கடன் வட்­டிக்­கான சான்­றிதழ் உள்­ளிட்­ட­வற்றை பெற்று வைக்­கலாம்.
முத­லீட்டில் மாற்றம்நிதி முத­லீ­டுகள் பர­வ­லாக இருப்­பது மிகவும் அவ­சியம். ஆனால், பல முத­லீட்­டா­ளர்கள் குறிப்­பிட்ட ஒரு நிதி சாத­னத்தில் பெரும்­பா­லான தொகையை முத­லீடு செய்யும் பழக்கம் கொண்­டுள்­ளனர். எனவே, முத­லீட்டை ஆய்வு செய்து தேவைக்­கேற்ப அவற்றை பர­வ­லாக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதே போல வாய்ப்­பி­ருந்தால் முத­லீட்டை அதி­க­மாக்க முயற்­சிக்க வேண்டும். அதிலும் குறிப்­பாக ஊதிய உயர்வு எதிர்­நோக்கி இருப்­ப­வர்கள் அதி­க­ரிக்கும் சம்­ப­ளத்­திற்கு ஏற்ப சேமிப்பு மற்றும் முத­லீட்டை அதி­க­மாக்­கு­வ­திலும் கவனம் செலுத்த வேண்டும்.
பத்­தி­ரங்கள்அண்மையில் சிறு சேமிப்­பிற்­கான வட்டி விகிதம் குறைக்­கப்­பட்­டது மற்றும் இவற்றின் வட்டி விகிதம் காலாண்­டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்­கப்­பட உள்­ளது ஆகி­யவை சிறு­சே­மிப்பு திட்­டங்­களை நாடும் முத­லீட்­டா­ளர்­களை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. ஆனால், கடன் பத்­தி­ரங்கள் மற்றும் பிபிஎப் திட்டம் ஆகி­ய­வற்றில் முத­லீடு செய்­ப­வர்­களை அதை தொடர வேண்டும் என்று நிதி ஆலோ­ச­கர்கள் கரு­து­கின்­றனர். இவை வரி விலக்­குடன் பலன் அளிப்­பதே இதற்கு காரணம் என்­கின்­றனர். தேசிய பென்சன் திட்­டத்தில் ரு.50,000 முத­லீடு செய்­வதும் ஏற்­ற­தாக இருக்கும். வாய்ப்­புள்­ள­வர்கள் வரி இல்லா பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­வ­தையும் பரி­சீ­லிக்­கலாம். ரிஸ்க் எடுக்க தயா­ராக உள்­ள­வர்கள் பரஸ்­பர நிதி திட்­டங்கள் மற்றும் நிறு­வன டிபாசிட் திட்­டங்­களை பரி­சீ­லிக்­கலாம். கடந்த மூன்று மாதங்­களில் தங்­கத்தின் விலை ஏறு­மு­கத்தில் இருப்­பது பலரை வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது. பர­வ­லாக்கில் கவனம் செலுத்­து­ப­வர்கள் அரசின் தங்க பத்­திரம் மூலம் முத­லீடு செய்­வ­தையும் பரி­சீ­லிக்­கலாம்.
காப்­பீடுநிதி திட்­ட­மி­டலில் எப்­போதும் காப்­பீட்­டிற்கு முக்­கிய பங்கு அளிக்க வேண்டும். காப்­பீடு பாது­காப்பு போது­மா­ன­தாக இருக்­கி­றதா என பரி­சீ­லிக்க வேண்டும். ஆயுள் காப்­பீடு தவிர மருத்­துவ காப்­பீட்டில் மேம்­பாடு தேவையா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல வீட்டு காப்­பீடு பற்­றியும் ஆய்வு செய்ய வேண்டும்.வள­மான பாது­காப்­பான வாழ்க்­கைக்கு நிதி திட்­ட­மிடல் மிகவும் அவ­சியம். நிதி­யாண்டின் துவக்­கத்தில் இதை மேற்­கொள்­வது பொருத்­த­மா­கவும் இருக்கும். தேவை­யான மாற்­றங்­களை செய்­யவும் இது கைகொ­டுக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)