பதிவு செய்த நாள்
11 ஏப்2016
09:51

மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 11) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 41.81 புள்ளிகள் உயர்ந்து 24,715.65 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 13.35 புள்ளிகள் அதிகரித்து 7568.55 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருந்த போதிலும், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும், நிம்மதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து 4ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பெற்றதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் பெற்றுள்ளன. இதனையத் தொடர்ந்து பி.ஹச்.இ.எல், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ஐடியா செல்லுலார் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் அடைந்துள்ளன. அதே சமயம் இன்போசிஸ், சிப்லா, ஹச்டிஎப்சி, டாடா ஸ்டீல், ஆசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|