பதிவு செய்த நாள்
15 ஏப்2016
10:06
புதுடில்லி : பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கடைசி காலாண்டின் நிகரலாபத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் கடந்த காலாண்டை விட இன்போசிஸ் நிறுவனத்தில் நிகரலாபம் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நான்காவது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 16 சதவீதம் அதிகரித்து ரூ.3597 கோடியாக உள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் வருமானம் 23.4 சதவீதம் அதாவது ரூ.16,550 கோடி அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக நிலையாக இருந்து வருவதால் இந்த காலாண்டில் 11.5 முதல் 13.5 சதவீதம் வரையே நிகரலாபத்தின் வளர்ச்சி இருக்கும் என இன்போசிஸ் எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்ப்புக்களை மீறி 23.4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது அந்நிறுவனத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|