பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:31
பெங்களூரு : ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், சென்ற, 2015 – 16ம் நிதியாண்டில், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், 16 சதவீதம் உயர்ந்து, 3,597 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், 3,097 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 17.1 சதவீதம் அதிகரித்து, 62,441 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த லாபம், 9.4 சதவீதம் அதிகரித்து, 13,491 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இன்போசிஸ், அதன் பங்குதாரர்களுக்கு, ஒரு பங்கிற்கு, 14.25 ரூபாய், இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.‘‘வாடிக்கையாளர்களுக்கு புதுமையான செயல்திட்டங்களை வகுத்து, வளர்ச்சிக்கு துணை நின்றதால், வருவாய் உயர்ந்துள்ளது,’’ என, இன்போசிஸ் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|