‘பருவ மழை பெய்தால் வட்டி விகிதம் குறையும்’‘பருவ மழை பெய்தால் வட்டி விகிதம் குறையும்’ ... இன்றைய உலக பொருளாதார உண்மை நிலை இன்றைய உலக பொருளாதார உண்மை நிலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஸ்டார்ட் அப்’ துறை: கார் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விற்­பனை; வலை­த­ளங்கள் மும்­முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
07:34

புது­டில்லி : வலை­தளம் மூலம் புது­மை­யான தொழில் புரியும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களின் வரி­சையில், டில்­லியைச் சேர்ந்த, ‘காடிபிக்ஸ், கார்­எக்ஸ்பர்ட்’ என்ற நிறு­வ­னங்கள் இணைந்­துள்­ளன. இவை, கார் உரி­மை­யா­ளர்­களை, கார் பழுது பார்ப்பு மையங்­க­ளுடன் இணைத்து, கார் உதி­ரி­பா­கங்கள் விற்­ப­னையை மேற்­கொள்­கின்­றன.
இதற்­காக, டில்லி மற்றும் தேசிய தலை­நகர் பிராந்­தி­யத்தில், 1,300க்கும் அதி­க­மான, கார் பழுது பார்ப்பு சேவை மையங்­க­ளுடன், காடிபிக்ஸ் ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்­ளது. அத்­துடன், ‘டெல்பி’ போன்ற, கார் உதி­ரி­பா­கங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுடன் கூட்டு சேர்ந்­துள்­ளது. கார் உரி­மை­யா­ளர்கள், மொபைல் போனில், காடிபிக்ஸ் ‘ஆப்’ – செய­லியை பதி­வி­றக்கி, டில்­லியில் உள்ள, கார் பழுது பார்ப்பு மையங்­களின் விவ­ரங்­களை அறி­யலாம். மேலும், வலை­தளம் வாயி­லாக பணம் செலுத்தி, ‘பிரேக் பேட், கூலண்ட், பேட்­டரி’ உள்­ளிட்ட உதி­ரி­பா­கங்­களை பெற்றுக் கொள்­ளலாம்.
இது குறித்து, காடிபிக்ஸ் நிறு­வனர் நிதின் பாஹல் கூறி­ய­தா­வது: கார் உரி­மை­யா­ளர்கள் பலர், அதிக செல­வாகும் என்­பதால், கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பழுது பார்ப்பு மையங்­களை தவிர்த்து, உள்ளுர், ‘மெக்­கானிக்’ கடை­களை நாடு­கின்­றனர். அங்கும், பெரும்­பாலும் அசல் உதி­ரி­பா­கங்­களை பொருத்­து­வ­தில்லை. அல்­லது அவற்றின் விலையை உயர்த்தி, சேவைக்கு அதிக கட்­டணம் வசூ­லிக்­கின்­றனர். இப்­பி­ரச்­னை­க­ளுக்கு, காடிபிக்ஸ் தீர்­வ­ளிக்­கி­றது. நன்கு ஆராய்ந்த பின், பழுது பார்ப்பு சேவை மையங்கள் வலை­த­ளத்தில் சேர்க்­கப்­ப­டு­கின்­றன; அந்த மையங்­களில், அசல் உதி­ரி­பா­கங்கள் விற்­ப­னையும் உறு­தி­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
இந்த வகையில், கார் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு, 30 – 40 சத­வீத பணம் மிச்­ச­மாகும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உதி­ரி­பா­கங்­களை, நேர­டி­யாக கொள்­முதல் செய்­வதன் மூலம், நிறு­வ­னத்­திற்கு வருவாய் கிடைக்­கி­றது; மற்­ற­படி, மெக்­கா­னிக்­கு­க­ளிடம் பணம் பெறு­வ­தில்லை.இவ்­வாறு அவர் கூறினார்.
இதே­போல, கார்­எக்ஸ்பர்ட் நிறு­வ­னமும், டில்­லியில், சேவையில் குறை­பாடு அல்­லது அதிக கட்­டணம் வசூ­லிக்கும், மெக்­கானிக் கடை­களை, வலை­த­ளத்தில் பதிவு செய்ய அனு­ம­திப்­ப­தில்லை.குறைந்த செலவில், நம்­ப­க­மான கார் பழுது பார்ப்பு சேவை­யுடன், அசல் உதி­ரி­பா­கங்­களை விரும்­பு­வோரின் தீர்­வாக, காடிபிக்ஸ், கார்­எக்ஸ்பர்ட் வலை­த­ளங்கள் விளங்­கு­கின்­றன.
*இந்­திய சாலை­களில், உத்­த­ர­வாத காலம் முடிந்த நிலையில், 1.20 கோடி கார்கள் இயங்­கு­கின்­றன. இதில், ஆண்­டு­தோறும், 20 லட்சம் கார்கள் சேர்­கின்­றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)