பதிவு செய்த நாள்
19 ஏப்2016
06:55
மும்பை : பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், இருசக்கர வாகனங்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால், ஆண்டுதோறும் காப்பீட்டை புதுப்பிக்கும் சுமை குறையும், ஆண்டுக்காண்டு உயரும் சேவை வரியால், பிரீமியம் அதிகரிக்கும் பிரச்னைக்கும், இத்திட்டம் தீர்வளிக்கும். இந்த, இருசக்கர வாகன காப்பீட்டுடன், சாலையோர வாகன சேவை உதவியும் வழங்கப்படுகிறது. ‘இச்சேவை, பெண் காப்பீட்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்’ என, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 80 நகரங்களில், இந்த காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இழப்பீடு கோராதவர்களுக்கு, காப்பீட்டை புதுப்பிக்கும்போது, ‘போனஸ்’ வழங்கப்படுவது, இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|