உயர் கல்வி மாண­வர்­க­ளுக்கு டாலர் அனுப்­பி­யதில் சாதனைஉயர் கல்வி மாண­வர்­க­ளுக்கு டாலர் அனுப்­பி­யதில் சாதனை ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.22 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.22 ...
5 ஆண்­டு­களில்... நேரடி விற்­பனை சந்தை ரூ.7,500 கோடி­யாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2016
08:21

புது­டில்லி : இந்­தி­யாவில், நேரடி விற்­பனை சந்தை, கடந்த ஐந்து ஆண்­டு­களில் மிகச் சிறப்­பான வளர்ச்சி கண்டு வரு­கி­றது.
ஒரு நிறு­வனம், அதன் தயா­ரிப்பு பொருட்­களை, கடை­களில் விற்­காமல், தனி மையம் மற்றும் முக­வர்கள் மூலம், நேர­டி­யாக நுகர்­வோ­ருக்கு விற்­பனை செய்­வதை, நேரடி விற்­பனை என்­கின்­றனர்.இந்­தி­யாவில், இத்­த­கைய விற்­ப­னையில், ‘ஆம்வே, டப்­பர்வேர், மெடிகேர், ஒரி­பிளேம்’ உள்­ளிட்ட நிறு­வ­னங்கள் ஈடு­பட்­டுள்­ளன.கடந்த, 2010ல், 4,100 கோடி ரூபா­யாக இருந்த, நேரடி விற்­பனை சந்தை, 83 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 7,500 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இச்­சந்­தையில், வட மாநி­லங்கள், 29 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளன.
தென் மாநி­லங்­களின் பங்­க­ளிப்பு, 25 சத­வீ­த­மாக உள்­ளது; இதில், கேரளா, 70 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது. இந்­தி­யாவின் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்­தி­யங்கள், முறையே, 18 மற்றும், 16 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன. வட­கி­ழக்கு மாநி­லங்­களின் பங்கு, 12 சத­வீ­த­மாக உள்­ளது. பகுதி நேர­மா­கவோ அல்­லது முழு நேர­மா­கவோ பொருட்­களை விற்­பனை செய்யும் வசதி, உழைப்­பிற்­கேற்ப கிடைக்கும் வருவாய், பணியில் சுதந்­திரம், நிறு­வ­னங்­களின் ஊக்கத் தொகை உள்­ளிட்ட அம்­சங்கள், நேரடி விற்­ப­னையில் பல­ரையும் ஈடு­பட துாண்­டு­கின்­றன. குறிப்­பாக, இல்­லத்­த­ர­சிகள் மிகுந்த ஆர்­வ­முடன், முக­வர்­க­ளாக பணி­யாற்றி வரு­கின்­றனர்.
தற்­போது, இத்­து­றையில், 60 லட்­சத்­திற்கும் அதி­க­மான நேரடி விற்­பனை முக­வர்கள் உள்­ளனர்; அவர்­களில், 35 லட்சம் பேர் பெண்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ‘வரும், 2025ல், நேரடி விற்­ப­னையில், பெண்­களின் பங்­க­ளிப்பு, ஒரு கோடியை எட்டும்’ என, புள்ளி விவரம் கூறு­கி­றது. நேரடி விற்­ப­னையில் ஈடு­பட்­டுள்ள பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள், பொருட்­களை தயா­ரிப்­பது, அவற்றை பாக்­கெட்­டு­களில் அடைப்­பது உள்­ளிட்ட பணி­களை, சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு அளித்து, பெற்றுக் கொள்­கின்­றன. இதனால், நேரடி விற்­பனை துறை, மறை­மு­க­மா­கவும், பல­ருக்கு வேலை­வாய்ப்­பு­களை வழங்கி வரு­கி­றது.
நேரடி விற்­பனை போல், ‘பொன்ஸி’ எனப்­படும், போலி விற்­பனை திட்­டங்­களும், சந்­தையில் புழங்­கு­கின்­றன. மத்­திய அரசு, தெளி­வான நேரடி விற்­பனை கொள்­கையை அறி­வித்து, தனி அமைச்­ச­கத்தை ஏற்­ப­டுத்­தினால், போலி திட்­டங்­களால் ஏற்­படும் பாதிப்­பு­களை தடுக்­கலாம் என, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நேரடி விற்­பனை நிறு­வ­னங்கள் தெரி­விக்­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)