பதிவு செய்த நாள்
20 ஏப்2016
23:31

புதுடில்லி : இந்தாண்டு, பங்குகளில் முதலீடு செய்தோரை விட, தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தோருக்கு அதிக வருவாய் ஆதாயம் கிடைத்துள்ளது.
கடந்த, 2014ல், தங்கம், வெள்ளியை விட, பங்குச்சந்தையில் முதலீடு செய்தது லாபகரமாக இருந்தது. ஆனால், 2015ல், சர்வதேச சந்தையில், தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு, உள்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கு மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தோர், கையை சுட்டுக் கொண்டனர். எனினும், கடந்த ஆண்டு பிற்பகுதியில், உலகளவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கத் துவங்கியது. அதன் விளைவாக, இந்தாண்டு துவங்கி, இதுவரை, தங்கம் மற்றும் வெள்ளி விலை, முறையே, 16.18 சதவீதம் மற்றும், 15.61 சதவீதம் உயர்ந்துள்ளன. அதேசமயம், இதே காலத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 1.15 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
கடந்த, 2015, மார்ச், 4ல், சென்செக்ஸ், சாதனை அளவாக, 30,024.74 புள்ளிகளை எட்டியது; இது, இந்தாண்டு, பிப்., 29ல், 22,494.61 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது. ஆக, கடந்த ஓராண்டில், சென்செக்ஸ், 14 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து, பங்கு முதலீட்டாளர்களை பதம் பார்த்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, தங்கம், வெள்ளி மீதான முதலீட்டு வருவாய் உயர்ந்துஉள்ளது.
கடந்த, 15 ஆண்டுகளில், மூன்று ஆண்டுகளை தவிர்த்து, எஞ்சிய, 12 ஆண்டுகள், தங்கம், முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வருவாயை வழங்கி வந்துள்ளது. கடந்த, 2012 – 14 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும், தங்கம், வெள்ளியை விட, பங்கு முதலீடுகளில், அதிக அளவில் வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|