பங்கு முத­லீட்டை விட தங்­கத்தில் அதிக ஆதாயம்பங்கு முத­லீட்டை விட தங்­கத்தில் அதிக ஆதாயம் ... ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.27 ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.27 ...
இந்­திய நிறு­வ­னங்கள் ‘டிஜிட்டல்’ தொழில்­நுட்ப முத­லீட்டில் பன்­னாட்டு நிறு­வ­னங்­களை விட அதிக ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2016
23:38

மும்பை : பொருட்­களை சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்கும், ஐ.டி., எனப்­படும், தகவல் தொழில்­நுட்ப பணி­க­ளுக்கும் தேவை­யான, ‘டிஜிட்டல்’ தொழில்­நுட்­பங்­களில் முத­லீடு செய்­வ­தற்கு, இந்­திய நிறு­வ­னங்கள், பன்­னாட்டு நிறு­வ­னங்­களை விட, அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கின்­றன.
இது, பி.டபிள்யு.சி., நிறு­வனம் மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்­நி­று­வனம், இந்­தி­யாவைச் சேர்ந்த, 100 நிறு­வ­னங்கள் உட்­பட, உல­க­ளவில், 1,988 நிறு­வ­னங்­களில் மேற்­கொள்­ளப்­படும், டிஜிட்டல் முத­லீ­டுகள் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது. அதில், 36 சத­வீத இந்­திய நிறு­வ­னங்கள், டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தில் முத­லீடு செய்­வ­தற்கு அதிக முக்­கி­யத்­துவம் அளிப்­பது தெரி­ய­வந்­துள்­ளது; இது, சர்­வ­தேச நிறு­வ­னங்­களில், 27 சத­வீ­த­மாக உள்­ளது. தகவல் தொழில்­நுட்ப பணி­களில், டிஜிட்டல் முத­லீ­டு­களை, 37 சத­வீத இந்­திய நிறு­வ­னங்­களும், 32 சத­வீத சர்­வ­தேச நிறு­வ­னங்­களும் மேற்­கொள்­கின்­றன.
அதே­ச­மயம், வாடிக்­கை­யாளர் அனு­பவம் தொடர்­பான பணி­களில், டிஜிட்டல் தொழில்­நுட்ப முத­லீ­டு­களை மேற்­கொள்­வதில், இந்­தி­யாவை விட, சர்­வ­தேச நிறு­வ­னங்கள் முன்­னிலை வகிக்­கின்­றன. இந்த ஆய்வில், 12 சத­வீத சர்­வ­தேச நிறு­வ­னங்கள், வாடிக்­கை­யாளர் அனு­பவம் சார்ந்த டிஜிட்டல் தொழில்­நுட்­பத்­திற்கு, அதிக முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­தாக கூறி­யுள்­ளன; இது, இந்­திய நிறு­வ­னங்­களை பொறுத்­த­வரை, 7 சத­வீ­த­மாக உள்­ளது. வர்த்­த­கத்தில், மிக அதிக அளவில் டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தை புகுத்தும் நிறு­வ­னங்கள், சீரான வருவாய் மற்றும் லாப வளர்ச்­சியை காண்­கின்­றன. இது, டிஜிட்டல் தொழில்­நுட்­பத்­திற்கு குறைந்த முக்­கி­யத்­துவம் அளிக்கும் நிறு­வ­னங்­களை விட, இரு மடங்கு அதி­க­மாக உள்­ளது. டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தை பின்­பற்­று­வதில், உல­க­ளவில், பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள், வர்த்­தக செயல்­பா­டு­களை விட, தொழில்­நுட்­பத்­திற்கே அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கின்­றன.
ஆய்­விற்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளி­டையே, தொழில்­நுட்பம் மற்றும் வர்த்­தகம் சார்ந்த டிஜிட்டல் பயன்­பாடு, முறையே, 66 சத­வீதம் மற்றும் 18 சத­வீ­த­மாக உள்­ளது; இது, இந்­திய நிறு­வ­னங்­களில், முறையே, 43 சத­வீதம் மற்றும், 42 சத­வீ­த­மாக உள்­ளது; 43 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான இந்­திய நிறு­வ­னங்­களின், டிஜிட்டல் தொழில்­நுட்ப பயன்­பாடு, சர்­வ­தேச சரா­ச­ரியை விட குறை­வாக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஏப்ரல் 20,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)