வர்த்தகம் » பொது
இரண்டாவது காலாண்டிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காணும்; தொழிலதிபர்கள் நம்பிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:51

புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் சிறப்பாக இருக்கும் என, இந்திய தொழிலதிபர்கள் நம்புவதாக, கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தின், உலக வர்த்தக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முதல் காலாண்டிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, இந்திய தொழிலதிபர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்தியா உட்பட, 36 நாடுகளில் உள்ள முன்னணி தொழிலதிபர்களிடம் நடத்திய ஆய்வில், 90 சதவீத இந்தியர்கள், உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, தெரிவித்துள்ளனர்.
அறிக்கை விவரம்:
சுலபமாக தொழில்புரிவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், சமீபத்திய கொள்கை அறிவிப்புகள், ஒழுங்குமுறை விதிமுறைகளில் செய்த மாற்றங்கள் ஆகியவையே, உலகளவில், பொருளாதார வளர்ச்சியில், இந்தியா முதலிடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை, தொடர்ந்து நீடிக்க காரணம்.
‘சிகப்பு நாடா’ முறை
முதல் காலாண்டில், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, 88 சதவீத இந்திய தொழிலதிபர்கள் தெரிவித்திருந்தனர். இது, இரண்டாவது காலாண்டில், 67 சதவீதமாக குறைந்துள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி, வரி சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்தியாவுக்கு, எதிர்பார்த்த வெற்றி கிட்டும். கடுமையான கட்டுப்பாடுகள், ‘சிகப்பு நாடா’ முறை, நிதி பற்றாக்குறை, போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, திறமையான ஊழியர்களுக்கு பற்றாக்குறை போன்றவை தான், இந்தியாவின், பிரதான பிரச்னைகளாக உள்ளன. நடப்பு காலாண்டில், புதிய கட்டடங்களில் முதலீடு அதிகரிக்கும் என, 51 சதவீத இந்திய தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு காலாண்டு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடுகள், ஏற்றுமதி ஆகியவை குறித்த, இந்தியர்களின் நம்பிக்கை, முதல் காலாண்டைவிட, இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளது. ஆய்வில், உலக பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை, 2012ம் ஆண்டின் இறுதி காலாண்டிற்குப் பின், நடப்பு காலாண்டில் தான் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஜி–7 நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், வட அமெரிக்கா, ஆசிய பசிபிக் நாடுகள் ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியில், தொழிலதிபர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்

வர்த்தக துளிகள் ஏப்ரல் 22,2016
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஏப்ரல் 22,2016
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஏப்ரல் 22,2016
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

எல்.ஐ.சி., பங்குகள் ‘லிஸ்டிங்’ பலன் எப்படி இருக்கும்? ஏப்ரல் 22,2016
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!