ரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் ஒரு மாத ஆய்வு முடிவுரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் ஒரு மாத ஆய்வு முடிவு ... அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணம் சம்­பா­திக்கும் கலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:21

ஒரு மணி நேரத்தில் படித்து விடக்­கூ­டிய சிறிய புத்­தகம் தான் என்­றாலும், வாழ்நாள் முழு­வதும் வழி­காட்­டக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது, பி.டி.பர்னம் எழு­திய, ‘ஆர்ட் ஆப் மணி கெட்டிங்!’ ஒரு நுாற்­றாண்­டுக்கு முன் வெளி­யா­னாலும் கூட, இந்த புத்­த­கத்தில் விவ­ரிக்­கப்­படும் அடிப்­படை வழிகள் என்றும் மாறா­த­தாக இருக்­கி­றது.
செல்­வத்­திற்­கான பாதை எப்­போ­துமே சம்­பா­திப்­பதை விட குறை­வாக செலவு செய்­வ ­தி­லேயும் இருக்­கி­றது என்று கூறும் பர்னம், பணம் சம்­பா­திக்க, ஒரு­வ­ருக்கு தெளி­வான சிந்­தனை தேவை என்று வலி­யு­றுத்­தி அதற்­கான வழிகளை நட்பு மிக்க குரு போல விவ­ரிக்­கிறார்:
வாழ்க்­கையில் வெற்றி பெறு­வ­தற்­கான நிச்­சய வழி. ஒருவர், தனக்கு பொருத்­த­மான துறையை தேர்வு செய்­வது தான். ஒரு சிலர் இயற்­கை­யான இயந்­தி­ரங்­களை கையா­ளக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கலாம். இன்னும் சிலர் இயந்­தி­ரங்­களை வெறுக்­கலாம். ஒருவர் தன் குணா­தி­ச­யத்­திற்கு ஏற்ற தொழில் அல்­லது வேலையை தேர்வு செய்தால் மட்­டுமே அவரால் வெற்றி பெற முடியும். சரி­யான தொழிலை தேர்வு செய்த பிறகு சரி­யான இடத்தில் இருக்க வேண்டும். வர்த்­தகம் செய்­வ­தாக இருந்தால் ஏற்­க­னவே எல்லா தேவை­களும் பூர்த்தி செய்­யப்­பட்ட இடத்தை தேர்வு செய்­யக்­கூ­டாது. பொருத்­த­மான இடங்­களில் வாய்ப்­பு­களை தேட வேண்டும். வாழ்க்­கையை துவக்­கு­ப­வர்கள் கடன் பெறு­வதை தவிர்க்க வேண்டும். கடன் ஒரு­வரை கீழே இழுத்­துச்­செல்­லக்­கூ­டி­யது. அது ஒரு அடிமை நிலை.
வெற்றி பெற தேவை­யான மற்­றொரு முக்­கிய குணம் விடா­மு­யற்­சி­யாகும். பல­ரிடம் விடா­முயற்சி இருப்­ப­தில்லை. இலக்கை நோக்கி முன்­னேறும் போது, நம் மீதே நம்­பிக்கை இழந்து முயற்­சியை தளர்த்­திக்­கொள்ளும் போது தோல்வி உண்­டா­கி­றது. தயக்கம் காட்­டினால் வேறு ஒருவர் முன்­னேறிச் சென்று விடுவார். விடா­மு­யற்சி என்­பது சுய சார்­பிற்­கான மற்­றொரு சொல் என உணர்ந்து செயல்­பட வேண்டும். உங்­களால் முயன்ற அளவு தீவி­ர­மாக பணி­யாற்­றுங்கள். தேவை எனில் அதி­கா­லையில் துயி­லெ­ழுங்கள். இரவு வரை பணி­யாற்­றுங்கள். உங்­களால் முடிந்­த­வற்றை ஒரு போதும் செய்­யாமல் இருக்க வேண்டாம். செய்ய வேண்­டிய எல்­லா­வற்­றையும் சிறப்­பாக செய்­யுங்கள்.
உலகில் அதிர்ஷ்டம் என்று எது­வு­மில்லை. ஒருவர் விடா­மு­யற்­சி­யுடன் செயல்­பட்டால் அவரை எந்த சக்­தி­யாலும் தடுக்க முடி­யாது.உங்கள் தொழி­லுக்கு ஏற்ற சிறந்த சாத­னங்­களையும், வழி­க­ளையும் பயன்­ப­டுத்­துங்கள். பணத்தின் மதிப்பை உணர்ந்­தி­ருந்தால் மட்­டுமே அதனால் பலன் பெற­ மு­டியும். அதற்­கேற்ற வகையில் தொழிலில் அனு­ப­வத்தை வளர்த்­துக்­கொள்ள வேண்டும். எல்லாம் தெரிந்­து­ விட்­டது என்று ஒரு­போதும் நினைக்கக் கூடாது. எப்­போதும் பய­னுள்ள ஒன்றை கற்­றுக்­கொள்ளுங்கள். எதிலும் சீரான மற்றும் ஒழுங்­கான தன்­மையை பெற்­றி­ருங்கள். உங்கள் நம்­ப­கத்­தன்­மையை எப்­போதும் தக்க வைத்­துக் ­கொள்­ளுங்கள்!

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)