ரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் ஒரு மாத ஆய்வு முடிவுரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் ஒரு மாத ஆய்வு முடிவு ... அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக்கடன்: தவிர்க்க வேண்டிய தவறுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:22

சொந்த வீடு வாங்க திட்­ட­மிடும் போது தேவைக்கும், விருப்­பத்­திற்கும் ஏற்ற வீடு கிடைக்­கி­றதா என்­ப­திலும், அதற்­கான பட்­ஜெட்­டிலும் தான் அதிகம் கவனம் செலுத்­து­கிறோம். அதன்பின், சொந்த வீட்டுக் கனவை நிறை­வேற்றத் தரும் வீட்­டுக்­க­டனை நாடு­கிறோம். பொது­வாக, வீட்­டுக்­கடன் பெறும் போது பலரும் வட்டி விகிதம் போன்ற அம்­சங்­களில் மட்­டுமே கவனம் செலுத்­து­கின்­றனர். ஆனால், வீட்டுக் கட­னுக்கு விண்­ணப்­பிக்கும் முன், பல விஷ­யங்­களை மனதில் கொள்ள வேண்டும். அதோடு, பொது­வாக பலரும் செய்யும் இந்த தவ­று­களை தவிர்க்க வேண்டும்.
போது­மான ஆய்வு பெரும்­பா­லானோர் தங்கள் சேமிப்பு கணக்கு வைத்­தி­ருக்கும் வங்­கி­யையே வீட்­டுக்­கடன் பெற அணு­கு­கின்­றனர். ஆனால், 15 முதல், 20 ஆண்டு காலம் தொடர்ந்து செலுத்த இருக்கும் கடனில் கூடுதல் கவனம் தேவை. எனவே, கடன் தர வாய்ப்­புள்ள வங்­கி­களை தேர்வு செய்து, அவற்றில் எந்த வங்கி உங்­க­ளுக்கு சிறந்த கடனை அளிக்­கி­றது என கண்­ட­றி­யுங்கள்.
தைரி­ய­மாக பேசுங்கள்வீட்­டுக்­கடன் பெறு­ப­வர்கள், அனே­க­மாக வங்­கிகள் தெரி­விக்கும் அனைத்து விதிகள் மற்றும் நிபந்­த­னை­களை அப்­ப­டியே ஏற்றுக் கொள்­கின்­றனர். ஆனால், வங்­கியில் இது தொடர்­பாக பேசி சாத­க­மான அம்­சங்­களை பெறலாம் என்­பது உங்­க­ளுக்குத் தெரி­யுமா? வங்கி அதி­கா­ரி­யிடம் உட்­கார்ந்து பேசினால் வட்டி விகிதம் துவங்கி, மறைந்­திருக்கும் கட்­டணம் வரை பல­வற்றில் சிறந்த அம்­சங்­களை பெறலாம். எனவே, தைரி­ய­மாக பேசி உங்­க­ளுக்­கான சலு­கை­களை கேளுங்கள்.நான்­கைந்து வங்­கி­களில் விசா­ரித்து, விவ­ரங்­களை ஒப்­பிட்டு பார்த்து உங்­க­ளுக்கு தேவை­யான அம்­சங்­களை அறிந்து வைத்­தி­ருப்­பது தான்.
அதிக கடன் தொகைவீட்டுக் கட­னுக்கு விண்­ணப்­பிக்கும் போது கூடு­த­லான தொகை கிடைக்க வேண்டும் என்றே மனம் விரும்பும். வங்­கிகள் உங்கள் வரு­மானம் மற்றும் திருப்பி செலுத்தும் ஆற்­றலை கணக்கில் கொண்டு கடன் வழங்­கு­கின்­றன. ஆனால், உங்கள் செலவு, பழக்­கங்கள் பற்றி நீங்கள் மட்­டுமே அறி­வீர்கள். உங்­களால் அடைக்க முடிந்­ததை விட அதிக தொகையை பெற வேண்டாம்.
கூடுதல் செல­வுகள்வீடு வாங்கும் போது சொத்து வரி, பர­ாம­ரிப்பு செலவு போன்ற கூடுதல் செல­வுகள் இருக்கும். அவற்­றையும் மனதில் கொள்ள வேண்டும். மாதத் தவ­ணை­யோடு இந்த செல­வு­க­ளையும் சேர்த்துக் கொள்ள மறக்கக் கூடாது.
காப்­பீடுவீட்­டுக்­கடன் பெறும் போது அதற்­கு­ரிய காப்­பீடும் பெற மறக்கக் கூடாது. எதிர்­பா­ராத அசம்­பா­விதம் நிகழும் பட்­சத்தில், வீட்­டுக்­கடன் குடும்­பத்­திற்கு சுமை­யாக மாறு­வ­தி­லி­ருந்து காப்­பீடு பாது­காப்பு அளிக்கும். ஆயுள் காப்­பீடு அல்­லது கிரிட்­டிகல் இல்னஸ் பாலிசியை பரி­சீ­லிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)