பதிவு செய்த நாள்
26 ஏப்2016
01:29
ஆமதாபாத் : இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுலா செல்வதிலும், செலவழிக்கும் திறனிலும், குஜராத் மாநில மக்கள் முன்னணியில் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு, இந்தியர்கள், அதிகளவில் சுற்றுலா செல்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா செல்வதிலும், அங்கு செலவு செய்வதிலும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் உள்ளனர். கடந்த, 2015ம் ஆண்டில், இந்தியாவில் இருந்து, 2.33 லட்சம் சுற்றுலா பயணிகள், ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். குஜராத்தில் இருந்து மட்டும், 13 ஆயிரத்து, 800 பேர், ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அவர்கள், 245 கோடி ரூபாய்க்கு செலவு செய்துள்ளனர். இதுகுறித்து, ஆஸ்திரேலிய சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குஜராத் மாநிலத்தவர் ஆஸ்திரேலியாவிற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|