பதிவு செய்த நாள்
27 ஏப்2016
23:56

மும்பை : இந்திய நிதி நிலைமை குறித்து, மத்திய நிதித்துறை ஒழுங்குமுறை குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மத்திய நிதி அமைச்சகம், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில், ரிசர்வ் வங்கி, ‘செபி’ காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த குழுவின் கூட்டம், செவ்வாயன்று நடந்தது.இதில், இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மை, மாறி வரும் உலக பொருளாதாரம் குறித்தும் விவாதித்தனர். மேலும், இந்தியாவின் தங்கம், பங்கு சந்தை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில், செபி தலைவர் யு.கே.சின்ஹா, பென்ஷன் கண்காணிப்பு ஆணையர் ஹேமந்த், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உர்ஜித் படேல், காப்பீட்டு ஒழுங்குமுறை தலைவர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|