பதிவு செய்த நாள்
28 ஏப்2016
00:00

கோல்கட்டா : ‘‘சர்வதேச பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, வெகுவாக குறைந்துள்ளது,’’ என, மத்திய வர்த்தக துறை இணை செயலர் ரவி கபூர் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், பொறியியல் சாதனங்களின் பங்களிப்பு, 20 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த, 15 ஆண்டுகளாக, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி வேகமாக குறைந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது.இந்திய நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றாவிட்டால், வரும், 2030ல், அவை, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி தொழிலில் இருந்தே வெளியேறும் நிலை ஏற்படலாம்.இந்தியாவில் ஏராளமான ஆய்வுக் கூடங்கள் உள்ளன. அவற்றுடன், உள்நாட்டு நிறுவனங்கள் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களில் பொறியியல் சாதனங்களை தயாரிக்க வேண்டும். அப்போது தான், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு நிகராக போட்டியிட முடியும்.
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பொறியியல் சாதனங்களை இறக்குமதி செய்து, அவற்றை பிரித்து, வடிவமைப்பை அறிந்து கொள்கின்றன. பின், சிறிய மாற்றங்களுடன், புதிய சாதனங்களை தயாரிக்கின்றன. இந்த நடைமுறை, நீண்ட காலத்திற்கு உதவாது.புதிய பொறியியல் சாதனங்களை வடிவமைக்க, ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு போதிய நிதி இல்லையென்றால், அரசு உதவியுடன் செயல்படும் ஆய்வுக் கூடங்களை, இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|