பதிவு செய்த நாள்
28 ஏப்2016
10:12

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடுகளின் வர அதிகரித்ததன் காரணமாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக சில நாடுகளின் நாணய மதிப்பு சரிவடைந்திருந்த போதிலும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்து காணப்படுவது இந்திய முதலீட்டாளர்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் அதிகரித்து ரூ.66.39 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.66.44 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|