பதிவு செய்த நாள்
28 ஏப்2016
15:54

புதுடில்லி : வேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக இந்தியாவில் அடுத்த 35 ஆண்டுகளில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவும் என ஐ.நா.வின் ஆசிய-பிசிபிக் பிராந்திய மனிதவள வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த 1991 முதல் 2013 வரை இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற வயதுடைய மக்கள்தொகை 30 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கே வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் என்ற நிலை இருப்பதால் இதில் 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் வேலை தேடுபவர்களாக உருவாகிறார்கள். பலர், மேற்படிப்புகளை தேர்வு செய்கிறார்கள். தற்போது, இந்தியாவில் 3 கோடி மாணவர்கள் உயர்கல்வியை பயின்று வருகிறார்கள். இப்படியே சென்றால் வரும் 2050-க்குள் 28 கோடி பேர் புதிதாக வேலை தேடுவோர் பட்டியலில் இணைவார்கள்.
இந்தியாவை பொறுத்தவரையில், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். குறைந்த சம்பளம் வாங்கும் மக்கள்தொகையை அதிகம் கொண்டுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. எனவே தொழிற்துறை மற்றும் உற்பத்தித்துறையில் அதிக கவனம் செலுத்தினால் இங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது சீனாவில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தித்துறை இன்னும் கூட பெரிய அளவில் வளரவில்லை. ஜி.டி.பி.யில் 15 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கும் உற்பத்தித்துறை 11 சதவீத வேலைவாய்ப்புகளையே வழங்கி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|