பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:03

புதுடில்லி : சுற்றுலா துறையைச் சேர்ந்த சொகுசு கப்பல் நிறுவனமான நார்வீஜிய குரூயிஸ் ஹோல்டிங்ஸ், இந்தியாவில் இரண்டு அலுவலகங்களை திறக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகம் முழுவதும், 23 சொகுசு கப்பல்களை இயக்குகிறது.சொகுசு கப்பல் பயண சந்தையை இந்தியாவில் ஊக்குவிக்கும் முகமாக, நார்வீஜிய குரூயிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், மும்பை, டில்லி ஆகிய இரண்டு நகரங்களில் அலுவலகங்களை திறக்க உள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் ஓடெல் கூறியதாவது: இந்தியாவிலிருந்து சொகுசு கப்பலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கே அலுவலகங்கள் திறப்பதன் மூலம், பயண ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொள்வது இனி எளிதாக இருக்கும். பிற நாடுகளில் உள்ள அலுவலகங்களோடு இந்த அலுவலகங்கள் இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|