பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:04

புதுடில்லி : ‘‘பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., இவற்றை இணைக்கும் திட்டம் தற்போது இல்லை,’’ என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், எம்.டி.என்.எல்., நிறுவனமும், தொலைதொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும், குறைந்த லாபம் ஈட்டி வருவதால், அவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவலை, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசியதாவது:இந்த இரண்டு நிறுவனங்களும், நிதி வருவாயை அதிகரிக்க இயன்ற அளவிற்கு முயற்சி செய்து வருகின்றன. இதனால் இரண்டு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டம் தற்போது மத்திய அரசிடம் இல்லை.இவ்வாறு அவர் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|