பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:06

புதுடில்லி : ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் ‘ஐபோன்’ மற்றும் ‘ஐபேட்’ சாதனங்களை தயாரித்து, நேரடியாக விற்கும் உரிமையை பெற்றுள்ளது. இந்தியாவில் ஒரே பிராண்டு பொருட்களின் சில்லரை விற்பனையில் ஈடுபடும் அன்னிய நிறுவனங்கள், 30 சதவீத மூலப் பொருட்களை, இந்திய நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும். இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் உயரதிகாரிகள், தொழிற்கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை செயலர், ரமேஷ் அபிஷேக் தலைமையிலான குழுவை சந்தித்து பேசினர். அப்போது, ஐபோன் சாதனங்களுக்கு தேவையான, நவீன தொழில்நுட்ப பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை என்பதால், கொள்முதல் விதியில் விலக்கு அளிக்குமாறு, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, ஆப்பிள் நிறுவனத்திற்கு விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|