பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:08

புதுடில்லி : சமீபத்தில், ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம், 251 ரூபாய் விலையில், ‘பிரீடம் 251’ என்ற, ஸ்மார்ட்போன் சாதனத்தை விற்க உள்ளதாக விளம்பரப்படுத்தி, சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில், டுகாஸ் டாட் காம் நிறுவனம், 888 ரூபாய்க்கு, ‘டுகாஸ் எக்ஸ்1’ என்ற ஸ்மார்ட்போனை விற்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 4 அங்குலம் திரையுடன், ‘டூயல் – கோர் பிராசசர்’ 2 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கும் என, டுகாஸ் தெரிவித்துள்ளது. டுகாஸ் வலைதளத்தில், இன்று இரவு, 10 மணி வரை, ஸ்மார்ட்போன், ‘புக்கிங்’ ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், 76662 04430 அல்லது 92232 22888 என்ற மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், பதிவு செய்யலாம். எக்காரணம் கொண்டும், இந்த எண்களில் அழைக்க வேண்டாம் என, டுகாஸ் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|