பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:09

புதுடில்லி : ’மத்திய அரசு, கொள்கை சீர்திருத்தங்களை அமல்படுத்தினால், இந்திய உணவு பொருட்கள் வினியோக துறையில், பிரிட்டன் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வரும்’ என, டன் அண்டு பிராட்ஸ்டீட் டன்கிராம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பொருட்கள் வினியோகம், பதப்படுத்துதல், கிடங்கு வசதி, ‘பேக்கிங்’ தொழில்நுட்பம், திறன் வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகிய ஐந்து பிரிவுகளில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வறிக்கை விவரம்:இந்திய உணவுப் பொருட்கள் வினியோக துறையில், இன்னும் எண்ணற்ற வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. ஏராளமான அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றல் இத்துறைக்கு உள்ளது. அதை, இந்தியா சரியானபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு ‘பிராண்டு’ பொருட்களின் சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க வேண்டும்.
நாடு முழுவதிலும் சீரான வரி விதிப்பிற்கான, சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தி, வணிக நடைமுறையில் உள்ள, கடுமையான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்கள் செய்யாதவரை, இந்திய உணவு பொருட்கள் வினியோக துறையில், எதிர்பார்க்கும் அன்னிய முதலீடுகள் குவியாது. இத்தகைய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், பிரிட்டன் நிறுவனங்கள், இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்ய முன்வரும். அவை, இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, வர்த்தகம் புரிவதற்கான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் தயாராக உள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|