பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:09

புதுடில்லி : ‘‘இந்தியாவின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் இறக்குதியில், சீனாவின் பங்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது,’’ என, மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:கடந்த, 2015 –16ம் நிதியாண்டில், ஏப்., – பிப்., வரையிலான 11 மாதங்களில், இந்தியா, 3,720 கோடி டாலர் மதிப்பிலான மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்துள்ளது. இது, 2012–13ம் நிதியாண்டின், இதே காலத்தில், 3,350 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், சீனாவில் இருந்து இறக்குமதியான மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் மதிப்பு, 1,650 கோடி டாலரில் இருந்து, 2,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம், இதே காலத்தில், இந்தியாவின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் ஏற்றுமதி, 820 கோடி டாலரில் இருந்து, 530 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மத்திய அரசு, 2020க்குள், மின்னணு சாதனங்கள் இறக்குமதியை அறவே குறைக்க திட்டமிட்டுள்ளது. மின்னணு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, எம்.எஸ்.ஐ.பி.எஸ்., திட்டத்தின் கீழ், மானியம் வழங்கப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளை அமைக்க, 20 சதவீதமும், அது சாராத பகுதிகளுக்கு, 25 சதவீதமும், மூலதன செலவின மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 2014, மே முதல் இந்தாண்டு, மார்ச் வரை, போஷ், ஜி.இ., எல்.ஜி., மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், 1.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களுக்கு அனுமதி கோரியுள்ளன.
பெரும்பான்மையான நிறுவனங்கள், சூரிய மின்சக்தி தகடுகள், தொலைத் தொடர்பு சாதனங்கள், வாகன மின்னணு கருவிகள், உதிரிபாகங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை தயாரிக்க ஆர்வமாக உள்ளன. மின்னணு வன்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள, ஏற்றுமதி நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் மின்னணு மூலப் பொருட்களுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கும்; உள்நாட்டு மூலப் பொருட்களுக்கு, உற்பத்தி வரியில் இருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவில் இருந்து, மின்னணு திரைகள், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், மொபைல் போன்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், தொலைத் தொடர்பு கருவிகள், மின்கலன்கள் அதிகமாக இறக்குமதி ஆகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|