பதிவு செய்த நாள்
29 ஏப்2016
10:09

மும்பை : ஏப்ரல் மாதத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டுள்ளன. இவ்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( ஏப்ரல் 29, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 55.65 புள்ளிகள் சரிந்து 25,547.45 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண்ணான நிப்டி 15.65 புள்ளிகள் சரிந்து 7831.60 புள்ளிகளாகவும் உள்ளன.
தொழில்நுட்படம், ஐடி, மின்சாரம், ஆட்டோ, வங்கிகள் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்பட்ட போதிலும், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவுடனேயே இருந்து வருகின்றன. சர்வதேச சந்தையை பொருத்த வரை ஹாங்காங், ஜப்பான், அமெரிக்க போன்ற நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|