பதிவு செய்த நாள்
29 ஏப்2016
15:35

நியூயார்க் : 2016ம் ஆண்டில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் 25 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிளாஸ்டோர் என்ற வேலைவாய்ப்பு இணையதளம், 2015ம் ஆண்டு மார்ச் 30ம் தேதியிலிருந்து 2016ம் ஆண்டின் மார்ச் 29 வரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள், போனஸ் உள்ளிட்ட சலுகைககள் போன்றவற்ணறின் அடிப்படையில் அதிகம் சம்பளம் தரும் அமெரிக்கா நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
25 நிறுவனங்கள் கொண்ட இந்த பட்டியலில் ஏ.டி.கெர்னி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கும் அடிப்படை சம்பளம் 143,620 டாலர். பிரபல இணையதளமான கூகுள் 5வது இடத்திலும் (123,331 டாலர்), அமேசான் லேப் 7வது இடத்திலும், விசா நிறுவனம் 11வது இடத்திலும் உள்ளது. புகழ்பெற்ற சமூக வலைதளங்களான பேஸ்புக் இந்த பட்டியலில் 12வது இடத்திலும், டுவிட்டர் 13வது இடத்திலும் உள்ளன. வால்மார்ச் இ காமர்ஸ் 15வது இடத்தில் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 22வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தரும் அடிப்படை சம்பளம் 125,000 டாலர்களாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|