பதிவு செய்த நாள்
30 ஏப்2016
06:26

பெங்களூரு : டி.டி.கே., பிரஸ்டீஜ், வீட்டை சுத்தப்படுத்தும் சாதனங்கள் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது. டி.டி.கே., பிரஸ்டீஜ் நிறுவனம், கடந்த, 60 ஆண்டுகளாக, சமையல் அறை சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், வீட்டை சுத்தப்படுத்தும் சாதனங்கள் தயாரிப்பு துறையின் சந்தை மதிப்பு, 2,500 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இந்த துறை, ஆண்டுதோறும், 15 – 20 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, பிரஸ்டீஜ் நிறுவனம், வீட்டை சுத்தப்படுத்தும் சாதனங்கள் தயாரிப்பில் களம் இறங்க முடிவு செய்து உள்ளது. இதற்காக ஆராய்ச்சி, தரம், விற்பனை போன்ற பிரிவுகளுக்கு, 50 பேர் கொண்ட குழுவை ஏற்கனவே நியமித்துள்ளது. மேலும், 50 ஆயிரம் சில்லரை கடைகள் மூலம், வீட்டை சுத்தப்படுத்தும் சாதனங்களை விற்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|