பட்ஜெட் ஓட்டல்களை நாடும் இந்தியர்கள்பட்ஜெட் ஓட்டல்களை நாடும் இந்தியர்கள் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.44 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.44 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி இலக்கை அடைந்த பிறகு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2016
08:01

நிதி திட்­ட­மி­ட­லையும் ஒரு இலக்­காக நிர்­ண­யித்­துக்­கொண்டு செயல்­பட்டால் அவற்றை நிச்­சயம் அடைந்து விடலாம். சேமிப்­பிற்கும் சரி, கடனை அடைப்­ப­தற்கும் சரி இது கைகொ­டுக்கும். இலக்கை அடையும் வரை உறு­தி­யாக இருக்க வேண்டும். இதை அறிந்­த­வர்கள் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­தியும் வரு­கின்­றனர். எல்லாம் சரி, இலக்கை அடைந்த பிறகு என்ன செய்­வது? இந்த கேள்வி பற்றி பலரும் யோசிப்­ப­தில்லை. இதனால், நோக்கம் நிறை­வே­றி­யதும் இலக்கை மறந்து விடு­கின்­றனர். இதனால் சேமிப்பு பழக்­கத்தின் பலனை இழக்­கலாம். எனவே, ஒரு இலக்கை வெற்­றி­க­ர­மாக நெருங்கும் போதே, அடுத்த பொருத்­த­மான இலக்கை தேர்வு செய்து சேமிப்பை தொடர வேண்டும். உட­னடி இலக்கு இல்லை என்றால், அந்த நிதியை அவ­சர கால நிதியை உரு­வாக்க பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம்.
பட்ஜெட்டுக்கு புது வழி
பட்ஜெட் போட்டு செலவு செய்­வது திட்­ட­மி­ட­லுக்கும் உதவும். ஆனால், வழக்­க­மாக பட்ஜெட் போடும் முறையில், அதா­வது செல­வு­களை பட்­டி­ய­லிட்டு அவற்­றுக்­கான நிதி ஒதுக்கும் முறையில், ஒரு சிக்கல் இருக்­கி­றது. இந்த முறை, திட்­ட­மி­டு­வ­தற்கு சிறந்­த­தாக இருந்­தாலும் செயல்­ப­டுத்தும் போது தடை­களை உண்­டாக்­கு­கி­றது. குறிப்­பிட்ட ஒரு செல­விற்கு நிதி ஒதுக்­கிய பிறகு அதை மறந்து விடு­கிறோம். ஆனால், சில மாதங்கள் கழித்து அந்த செலவு மீண்டும் வந்தால் சிக்­க­லாகி விடு­கி­றது. எனவே தான், பட்­டியல் முறையில் பட்ஜெட் போடு­வ­தற்கு பதில் வட்ட வடி­வத்தில் பட்ஜெட் போடு­வது ஏற்­ற­தாக இருக்கும் என்­கின்­றனர்.
பட்டியல் முறை :பொது­வாக பட்ஜெட் போடும் போது முதலில் வரு­மா­னத்தை பட்­டி­ய­லி­டு­கிறோம். அதன் பிறகு செல­வு­களை வரி­சை­யாக பட்­டி­ய­லி­டு­கிறோம். ஒவ்­வொரு செல­வுக்கும் உரிய தொகை ஒதுக்க முயற்­சிக்­கிறோம். செல­வுகள் போக மீதி இருந்தால் உப­ரி­யாக வைத்­துக்­கொள்வோம். ஒரு சில செல­வு­களை அவை நிறை­வே­றி­யதும்,பட்­டி­யலில் இருந்து அடித்து விடுவோம். ஆனால், ஒரு சில செல­வுகள் மீண்டும் ஏற்­ப­டலாம். உதா­ர­ணத்­திற்கு, அவ­சர கால நிதியை எடுத்­துக்­கொள்வோம். இதற்­கான தொகையை சேமித்த பிறகு, இதற்­கான ஒதுக்­கீட்டை தேவை இல்லை என நினைப்போம். ஆனால், அவ­சர கால நிதியை பயன்­ப­டுத்தும் தேவை ஏற்­பட்டால் என்ன செய்­வது? அந்த நிதியை மீண்டும் உரு­வாக்க வேண்டும். அப்­போது பட்­ஜெட்டில் துண்டு விழும்.
நேர்கோடு அல்ல வாழ்க்கை :வாழ்க்­கையும் சரி, செல­வு­களும் சரி ஒரே நேர்க்­கோட்டில் அமை­வ­தில்லை. உதா­ர­ணத்­திற்கு, சில காலம் சீராக இருக்கும். அதா­வது, திட்­ட­மிட்­ட­படி செல­வுகள் அமையும். நடுவே திடீ­ரென இறக்கம் உண்­டாகும். அதா­வது எதிர்­பா­ராத செல­வுகள் ஏற்­ப­டலாம். இந்த சரிவில் இருந்து மீண்டு வர முயற்­சிக்க வேண்டும். அதன் பிறகு திடீ­ரென உயர்வும் உண்­டாகும். போனஸ் போன்­றவை மூலம் இது நிக­ழலாம். இந்த ஏற்ற, இறக்கம் இயல்­பா­னது தான் என்­றாலும், திட்­ட­மி­டலில் இது சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம். நிதி இலக்கை நோக்கி முன்­னேறும் பாதையில் இது வேகத்­த­டை­யாக அமையும். பட்­டியல் முறையில் உள்ள பாத­க­மான அம்சம் இது தான். இதை தவிர்க்க, பட்­ஜெட்டை வட்ட வடிவில் யோசிக்க வேண்டும். இந்த முறையில், எப்­போ­துமே மாற்­றத்­திற்­கான இடை­வெளி இருக்கும். அந்த இடை­வெளி தான் இலக்கை நோக்கி முன்­னேற உதவும்.

வட்ட வடிவ பட்ஜெட் :வட்ட வடிவ பட்­ஜெட்­டையும் செல­வுகள் பட்­டி­யலில் இருந்து தான் துவங்க வேண்டும். ஆனால், அடுத்த கட்­ட­மாக செல­வு­களை வகைப்­ப­டுத்தி, முன்­னு­ரி­மைக்கு ஏற்ப நிதி ஒதுக்க வேண்டும்.உதா­ர­ண­மாக, மாதந்­தோறும் வரும் செல­வு­களை, வழக்­க­மான செல­வுகள் என வகைப்­ப­டுத்திக் கொள்­ளலாம். இதற்­கான நிதி ஒதுக்­கிய பிறகு, எதிர்­பா­ராமல் திடீ­ரென ஏற்­ப­டக்­கூ­டிய செல­வு­க­ளுக்கு என்று நிதி ஒதுக்க வேண்டும். அதன் பிறகு கடன்­களை அடைக்க, அவ­சர கால நிதி, ஓய்­வூ­திய நிதி மற்றும் இதர என செல­வு­களை பிரித்­துக்­கொள்ள வேண்டும். இப்­படி அடிப்­ப­டை­யாக செல­வு­களை பிரித்­துக்­கொண்ட பிறகு, மாதந்­தோறும் தேவைக்­கேற்ப இந்த வரை­ப­டத்தில், அந்த அந்த பிரி­வுக்குள் மாற்றம் செய்து கொள்­ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)