பட்ஜெட் ஓட்டல்களை நாடும் இந்தியர்கள்பட்ஜெட் ஓட்டல்களை நாடும் இந்தியர்கள் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.44 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.44 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி2பி லெண்டிங் தளங்கள்:ரிசர்வ் வங்கி வரைவு அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2016
08:04

பி2பி லெண்டிங் என சொல்­லப்­படும் இணை­ய­தளம் மூலம் தனி­ந­பர்கள் கடன் வழங்­கவும், கடன் பெறவும் வழி செய்யும் நிறு­வ­னங்­களை முறைப்­ப­டுத்த, வரைவு நெறி­மு­றைகளை ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்­ளது.
தொழில்­நுட்­பத்தின் தாக்­கத்தால் நிதித்­து­றையில் புதிய சேவை­களும், புது­ வகை நிறு­வ­னங்­களும் அறி­மு­க­மாகி பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. டிஜிட்டல் வாலெட்கள் பண பரி­வர்த்­த­னையில் புதிய வச­தியை கொண்டு வந்­தி­ருக்­கின்­றன என்றால், தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி, கடன் வழங்­கு­வதில் ஈடு­படும் இணைய நிறு­வ­னங்கள் பிர­ப­ல­மாகி வரு­கின்­றன.
புதிய வகை நிறு­வ­னங்கள் இந்த வகையில், பி2பி லெண்டிங் எனப்­படும் இணையம் மூலம் கடன் வழங்க வழி செய்யும் நிறு­வ­னங்கள் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன. பியர் 2 பியர் லெண்டிங் என்­பதன் சுருக்­கமே பி2பி லெண்டிங் என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.இந்த வகை நிறு­வ­னங்கள் இணை­ய­தளம் மூலம் தனி­ந­பர்­க­ளுக்கு இடையே கடன் வழங்கும் மேடை­யாக செயல்­பட்டு வரு­கின்­றன. கடன் தேவை உள்­ள­வர்­க­ளையும், கடன் அளிக்க முன்­வ­ரு­ப­வர்­க­ளையும் இந்த தளங்கள் இணைக்­கின்­றன. தனி­ந­பர்கள் இவற்றில் உறுப்­பி­ன­ராக பதிவு செய்து கொண்டு, கடன் வழங்­கலாம்; கடன் பெறலாம். வங்­கிகள் அல்­லது நிதி­ நி­று­வ­னங்கள் தலை­யீடு இல்­லாமல் இவை செயல்­ப­டு­கின்­றன.
இணையம் மூலம் சாமா­னி­யர்­க­ளிடம் இருந்து நிதி திரட்ட உதவும் கிர­வுட்­பண்டிங் தளங்கள் போல இவையும் பிர­ப­ல­மாகி கொண்­டி­ருக்­கின்­றன. பேர்சென்ட், லெண்டென் கிளப் உள்­ளிட்ட நிறு­வ­னங்கள் இந்த பிரிவில் செயல்­பட்டு வரு­கின்­றன. கடந்த ஆண்டு மட்டும், 20 புதிய நிறு­வ­னங்கள் இப்­பி­ரிவில் உரு­வா­கி­யுள்­ளன. இணைய கடன் மேடை­க­ளாக செயல்­படும் இந்த நிறு­வ­னங்கள் இது­வரை ரிசர்வ் வங்­கியால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில், இவற்றை முறைப்­ப­டுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி, அண்­மையில் வரைவு நெறி­மு­றைகள் கொண்ட அறிக்­கையை வெளி­யிட்டு, இது தொடர்­பாக கருத்­துக்­களை கோரி­யுள்­ளது.
இணையம் மூலம் கடன் வழங்க வழி செய்யும் நிறு­வ­னங்கள் வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், இவை குறைந்­த­பட்சம், 2 கோடி ரூபாய் முத­லீடு கொண்டு இ­ருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.
ரிசர்வ் வங்கி கட்­டுப்­பாடுரிசர்வ் வங்கி குறிப்­பிட்­டுள்ள மற்ற முக்­கிய வரைவு நெறி­மு­றைகள் வரு­மாறு:* பி2பி நிறு­வ­னங்கள் சேவை­களை கடன் வழங்­கு­பவர் மற்றும் கடன் பெறு­ப­வரை இணைக்கும் வகையில் மட்­டுமே செயல்­பட வேண்டும். இவை வங்­கியின் செயல்­பா­டு­களை பெறவோ, டிபாசிட் கோரவோ முடி­யாது* கடன் தொகை, கொடுப்­ப­வ­ரிடம் இருந்து பெறு­ப­வ­ருக்கு நேராக செல்ல வேண்டும்* வட்டி வரு­மானம் தொடர்­பாக உத்­தர­வாதம் அளிக்க கூடாது* கடன் வழங்­கு­வதில் வரை­யறை இல்­லாமல் விரி­வாக்கம் செய்ய முடி­யாது* கடன் வழங்­கு­ப­வர்­க­ளுக்கும் வரம்பு உண்டு* இந்­தி­யாவில் இவற்­றுக்­கான அலு­வ­லகம் இருக்க வேண்டும்.
புதிய அங்­கீ­காரம் ரிசர்வ வங்­கியின் வரைவு நெறி­மு­றைகள், இத்­து­றையை முறைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை ­யாக மட்டும் அல்­லாமல் துறைக்­கான அங்­கீ­கா­ர­மா­கவும் பார்க்­கப்­ப­டு­கி­றது. இணையம் மூலம் கடன் வழங்க வழி செய்யும் நிறு­வ­னங்­களை, வங்கி சாரா நிதி நிறு­வனம் அந்­தஸ்து பெற வைப்­பது அடுத்த கட்ட வளர்ச்­சிக்கு வழி வகுக்கும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த வகை நிறு­வ­னங்கள் கடன் வழங்­கு­வ­தற்­கான மாற்று வழி­யாக அமையும் என்று ரிசர்வ் வங்கி தன் அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது. ரிசர்வ் வங்­கியால் நெறி­மு­றைப்­ப­டுத்­தப்­படும் போது, தற்­போது வழங்­கு­வதை விட பெரிய அளவில் கடன் வழங்கும் வாய்ப்பு ஏற்­படும் என்றும் இத்­துறை வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். குறு­கிய கால கடன் தேவை பெறு­ப­வர்­களுக்கு இவை பெரும் அளவில் உத­வி­யாக இருக்கும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.
வழக்­க­மான வங்­கி­க­ளிடம் கடன் பெற முடி­யா­த­வர்கள் மற்றும் அதிக வட்­டிக்கு கடன் பெறு­ப­வர்­க­ளுக்கும் இச்­சேவை உத­வி­யாக இருக்கும். இவை, சிறிய வங்­கிகள் மற்றும் வங்கி சாரா நிறு­வ­னங்­க­ளுக்கு போட்டி­யாக உரு­வா­கலாம் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால், இவை முற்­றிலும் வேறு வகை­யான வாடிக்­கை­யா­ளர்­களின் தேவையை பூர்த்தி செய்­வதால் எந்த பாதிப்பும் இருக்­காது என்ற கருத்தும் நில­வு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)