டாடா உருக்­கா­லையை வாங்க குப்தா முயற்சிடாடா உருக்­கா­லையை வாங்க குப்தா முயற்சி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.41 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.41 ...
அதிர்ச்சி ‘ரிப்போர்ட்’; போலி பொருட்கள் ஏற்­று­ம­தியில் இந்­தி­யா­வுக்கு 5ம் இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2016
06:48

பாரிஸ் : நம் நாட்டின் ஏற்­று­மதி குறைந்­துள்ள நிலையில், போலிப் பொருட்கள் ஏற்­று­ம­தியில் மட்டும், உல­க­ளவில், இந்­தியா ஐந்தாம் இடத்தை பிடித்­துள்­ள­தாக, பிரான்சைச் சேர்ந்த, ஓ.இ.சி.டி., அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.
அதன் விவரம்:கடந்த, 2011 – 13 வரை­யி­லான, மூன்று ஆண்­டு­களில், சர்­வ­தேச சுங்கத் துறை­யினர், ஐந்து லட்­சத்­திற்கும் அதி­க­மான பறி­முதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். அவற்றில், கைப்பை, வாசனை திர­வி­யங்கள், இயந்­திர உதி­ரி­பா­கங்கள், ரசா­ய­னங்கள் உட்­பட, பல பொருட்கள் போலி­யா­னவை என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. குறிப்­பாக, கால­ணிகள் தான், புகழ் பெற்ற, ‘பிராண்­டு’­களின் பெயரில் போலி­யாக தயா­ரித்து, அதிகம் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. உண­வுப்­பொ­ருட்­களில், ஸ்ட்ராபெரி, வாழைப்­பழம் போன்­றவை கூட, பிர­பல நிறு­வ­னங்­களை போல், போலி பெயர்­களில், ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.
வலை­தளம் வாயி­லான விற்­ப­னையில், போலி பொருட்­களின் புழக்கம் அதி­க­ரித்து வரு­கி­றது. மதிப்­பீட்டு காலத்தில், சர்­வ­தேச சுங்கத் துறை­யினர் பறி­முதல் செய்த போலி பொருட்­களில், 62 சத­வீதம், அஞ்­சலில் அனுப்பி வைக்­கப்­பட்­டவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. போலி பொருட்கள் ஏற்­று­ம­தியில், சீனா முத­லி­டத்தில் உள்­ளது. ஆய்­விற்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட காலத்தில், பறி­முதல் செய்­யப்­பட்ட போலி பொருட்­களில், சீனாவின் பங்கு, 63.2 சத­வீ­த­மாக உள்­ளது. அடுத்த இடங்­களில், துருக்கி, 3.3 சத­வீதம்; சிங்­கப்பூர், 1.9; தாய்­லாந்து 1.6; இந்­தியா 1.2 சத­வீதம் ஆகி­யவை உள்­ளன.
போலி பொருட்­களின் இறக்­கு­ம­தியால் அதிகம் பாதிக்­கப்­படும் நாடு­களில், அமெ­ரிக்கா முத­லி­டத்தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், இத்­தாலி, பிரான்ஸ், சுவிட்­சர்­லாந்து, ஜப்பான் ஆகி­யவை உள்­ளன. ஐரோப்­பாவில் இறக்­கு­ம­தி­யாகும் பொருட்­களில், ஐந்து சத­வீதம் போலி­யா­னவை. வளரும் நாடுகள், மிகப் பெரிய அளவில் வர்த்­தகம் மேற்­கொள்­வ­தற்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் உள்­ளன. இருந்­த­போ­திலும், அவை, போலி­களை ஒழிப்­ப­தற்கு போது­மான நிர்­வாகத் திறன் இன்றி உள்­ளன. ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் உள்­ளிட்ட தடை­யற்ற வர்த்­தக மண்­டல நாடுகள் மற்றும், ஹாங்காங், சிங்­கப்பூர் வழி­யாக போலி பொருட்கள் ஏற்­று­ம­தி­யா­கின்­றன.
அமைப்பு சார்ந்த பயங்­க­ர­வா­திகள் உள்ள ஆப்கன், சிரியா போன்ற நாடுகள் வழி­யா­கவும், போலி பொருட்கள் கடத்­தப்­ப­டு­கின்­றன. இவற்றின் வாயி­லான வருவாய், பயங்­க­ர­வாத குழுக்­க­ளுக்கும் செல்­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
போலி­யான வாகன உதி­ரி­பா­கங்கள், மருந்­துகள், நச்சு ரசா­யனம் கலந்த பொம்­மைகள், குழந்தை உணவுப் பொருட்கள், தவ­றான கணக்­கீட்டைக் காட்டும் மருத்­துவ உப­க­ர­ணங்கள் ஆகி­யவை,மனித உயி­ருக்கே அச்­சு­றுத்­த­லாக உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)