பதிவு செய்த நாள்
04 மே2016
00:48

நியூயார்க் : ‘‘இந்தியாவில் உள்ள பெரிய சந்தை வாய்ப்பை, ஆப்பிள் பயன்படுத்தி கொள்ளும்,’’ என, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு, இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய சந்தை மிகவும் பெரியது. வரும், 2022ல், மக்கள் தொகை யில், இந்தியா முன்னணி நாடாக திகழும். மேலும் அதிக இளைஞர்களை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. இவர்கள், ‘ஸ்மார்ட் போன்களை’ அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்திற்கு, அமெரிக்காவை அடுத்து, சீனா பெரிய சந்தையாக உள்ளது. இந்த இரண்டு சந்தைகளிலும், கடைசி காலாண்டில், ஆப்பிள் ஐபோன் விற்பனை, 11 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம்,இந்தியாவில், ஐபோன் விற்பனை, 56 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|