சீனா, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐ.எம்.எப்.,சீனா, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐ.எம்.எப்., ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.63 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.63 ...
இந்திய தொழில் துறையில்... வர்த்தக, வரி கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்க நிறுவனங்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2016
00:49

வாஷிங்டன் : ‘இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில் புரி­வ­தற்கு தடை­யாக உள்ள கட்­டுப்­பா­டு­க­ளையும், வரி விதிப்­பு­க­ளையும் நீக்க வேண்டும்’ என, அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் கோரிக்கை விடுத்­துள்­ளன.
அமெ­ரிக்­காவில், அடுத்த மாத துவக்­கத்தில், அணு பாது­காப்பு உச்சி மாநாடு நடை­பெ­று­கி­றது. இதில், பங்­கேற்க உள்ள பிர­தமர் மோடி, அதிபர் ஒபா­மாவை சந்­திப்­ப­துடன், அமெ­ரிக்க பார்­லி மென்ட் கூட்டுக் கூட்­டத்­திலும் உரை­யாற்ற உள்ளார். இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, இந்­திய தொழில் துறையில் உள்ள தேவை­யற்ற கட்­டுப்­பா­டுகள், வரி விதிப்­புகள் ஆகி­ய­வற்றை நீக்­கு­மாறு, மோடிக்கு, ஒபாமா அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அமெ­ரிக்க தயா­ரிப்­பா­ளர்கள் சங்­க­மான, ‘நாம்’ வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இந்த அமைப்பின் தலைமை செயல் அதி­காரி ஜே டிம்மன்ஸ், அமெ­ரிக்க வர்த்­தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கெர் மற்றும் அமெ­ரிக்க வர்த்­தக பிர­தி­நிதி மைக்கேல் புரோமன் ஆகி­யோ­ருக்கு கடிதம் எழு­தி­யுள்ளார்.
அதன் விவரம்: இந்­தியா – அமெ­ரிக்கா இடையே பல ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தார உறவு உள்­ளது. இருந்­த­போ­திலும், இரு நாடு­களின் பரஸ்­பர வர்த்­த­கமும், முத­லீ­டு­களும் மிகக் குறை­வா­கவே உள்­ளன. கடந்த, 2014ல் இந்­திய பிர­த­ம­ராக மோடி பொறுப்­பேற்­றதும், ‘இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில்­பு­ரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்; அன்­னிய முத­லீ­டு­களை ஈர்க்க, சந்­தைகள் திறந்து விடப்­படும்’ என்றார். அதனால், இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான வர்த்த­க வளர்ச்­சிக்கு தடை­யாக உள்ள பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதன்­படி, இரு முறை பரஸ்­பரம் உயர்­மட்ட வர்த்­தக பேச்சும் நடை­பெற்­றது. எனினும், இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை மேலும் சுல­ப­மாக்க வேண்டும்.
இந்­தியா, நவீன தயா­ரிப்பு மற்றும் கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிப்­பதன் மூலம், முத­லீ­டு­களை ஈர்த்து, வளர்ச்சி காணலாம். அமெ­ரிக்க தயா­ரிப்­பா­ளர்கள், நீண்ட கால­மாக இந்­தியதொழில் துறையில், வணிக ரீதியில் பல்­வேறு இடர்­பா­டு­களை சந்­தித்து வரு­கின்­றனர். அவற்­றுக்கு தீர்வு கண்டால், அமெ­ரிக்க நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் தாரா­ள­மாக முத­லீடு செய்ய காத்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக, இந்­தியா, மேலும் பல துறை­களில் தாரா­ள­ம­ய­மாக்கல் கொள்­கையை அமல்­ப­டுத்த வேண்டும். பார­பட்­ச­மான நடை­மு­றை­களை நீக்க வேண்டும். அறி­வுசார் சொத்­து­ரி­மையை பாது­காக்க, முன்­னு­ரிமை அளிக்க வேண்டும்.
இந்த அம்­சங்­களை பிர­தமர் மோடி­யிடம், அதிபர் ஒபாமா வலி­யு­றுத்தி, இந்­திய வணி­கத்தில் உள்ள தடை­கற்­களை அகற்ற வேண்டும். அதன் மூலம், இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான பரஸ்­பர வர்த்­தகம் மேலும் செழிக்கும்.அவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)