பதிவு செய்த நாள்
05 மே2016
04:53

புதுடில்லி : புதிய ரயில் பாதை, விரிவாக்க பணிகள் உள்ளிட்டவற்றில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த, இணையதள அடிப்படையிலான திட்ட கண்காணிப்பு வசதியை உருவாக்கி உள்ளது, இந்திய ரயில்வே.
கடந்த, 2014 15ல், 58 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, ரயில்வேயின் மூலதன செலவு, 2015 16ல், 93 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இது, நடப்பு நிதியாண்டில், 1.21 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ரயில்வே, 600 முக்கிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இவற்றின் மதிப்பு, 4.50 லட்சம் கோடி ரூபாய். பல திட்டங்களில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, திட்ட பணிகள் குறித்த கண்காணிப்பு வசதியை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார். இதனால், ரயில்வே திட்டங்களில் வெளிப்படையான நிர்வாகம் ஏற்படுவதுடன், பணிகளும் விரைந்து முடியும் என கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|