பதிவு செய்த நாள்
05 மே2016
04:56

புதுடில்லி : மைந்த்ரா நிறுவனம், ஜூன் மாதம் முதல், ‘டெஸ்க்டாப்’ பதிப்பு மூலமாகவும் பொருட்களை வாங்கும் வசதியை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளது. துவக்கத்தில் இணையதளத்தின் மூலமாக வர்த்தகம் செய்து வந்த மைந்த்ரா, பின் ஒரு கட்டத்தில், ‘மொபைல் ஆப்’ மூலமாக மட்டுமே அணுக முடியும் என்று அறிவித்து விட்டது. இந்நிலையில், தற்போது ஜூன் மாதம் முதல், மீண்டும் டெஸ்க்டாப் மூலமாகவும், இணையதளத்தில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, மைந்த்ரா தலைமை செயல் அதிகாரி ஆனந்த் நாராயணன் கூறியதாவது: தனிப்பட்ட நபர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை, தங்கள் விருப்பப்படி வாங்க, மொபைல் ஆப் தான் சிறந்த தேர்வாகும். தற்போது, பலரும், கம்ப்யூட்டர் இணையதளம் மூலம், பொருட்களை விற்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|