பதிவு செய்த நாள்
05 மே2016
05:01

புதுடில்லி : கடந்த ஏப்ரல் மாதத்தில், தனியார் துறையில், தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனங்களின் செயல்பாடு, மந்த கதியில் இருந்ததாக, நிக்கி மார்கிட் அமைப்பின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம்:கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவின் பொருளாதார சூழல் நன்கு இருந்தது. தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையில், சில நிறுவனங்களின் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றது. அதே சமயம், சேவை துறையில் பிற நிறுவனங்களுக்கு, புதிய ‘ஆர்டர்’கள் குறைவாகவே கிடைத்தன. தயாரிப்பு துறையை பொறுத்தவரை, முன்னேற்றமின்றி காணப்பட்டது. இரு துறைகளிலும், வேலைவாய்ப்பில் எந்தவித மாற்றமும் காணப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால், கடந்த ஏப்ரலில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை உற்பத்தி அடிப்படையிலான, ‘என்.ஐ.சி.பி.ஓ.,’ குறியீடு, 52.8 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, முந்தைய மார்ச் மாதத்தில், 54.3 புள்ளிகளாக இருந்தது.இதே காலத்தில், இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் அடிப்படையில் கணிக்கப்படும், ‘என்.எஸ்.பி.ஏ.,’ குறியீடு, 54.3ல் இருந்து, 53.7 புள்ளிகளாக குறைந்துள்ளது.
இந்தாண்டு மார்ச் வரை, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, வேகமாக வளர்ச்சி கண்டு வந்த தனியார் துறை, ஏப்ரலில் மந்தமடைந்து உள்ளது. பொருட்களின் தேவைப்பாடு குறைந்துள்ளதால், தயாரிப்பு நிறுவனங்கள், வளர்ச்சி பாதையில் வலுவாக நடைபோட முடியாமல் திணறி வருகின்றன. கடந்த மாதம், சேவை துறை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த சூழலில், அவற்றுக்கான வர்த்தக வாய்ப்பில் தேக்க நிலை காணப்பட்டது.
எரிசக்தி, மூலப்பொருள் ஆகியவற்றின் செலவுகள் அதிகமானதால், தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனங்கள், ஏப்ரலில், விற்பனை விலையை மீண்டும் உயர்த்தின. மதிப்பீட்டு மாதத்தில், நிறுவனங்கள் மிதமான அளவிலேயே விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவற்றின் பணியாளர் எண்ணிக்கையும், குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கவில்லை. அத்துடன், வர்த்தக வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இது போன்ற காரணங்களால், கடந்த ஏப்ரலில், தனியார் துறையின் உற்பத்தி வளர்ச்சி சுணக்கம் கண்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோரிக்கைரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு ஜனவரி முதல், இந்தாண்டு ஏப்ரல் வரை, வங்கிகளுக்கான,‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 1.50 சதவீதம்குறைத்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கு, வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் என, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|