பதிவு செய்த நாள்
07 மே2016
07:42
புதுடில்லி : இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்கு, மென்பொருள் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை, விப்ரோ நிறுவனம் பெற்றுள்ளது. இங்கிலாந்து நாட்டில், குடிநீர் வினியோகத்தில், தேம்ஸ் வாட்டர் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு, 1.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இங்கிலாந்து அரசு, குடிநீர் வினியோகத்தில் விதிமுறைகளை மாற்றி உள்ளது. இதன்படி மக்கள், தங்களுக்குத் தேவையான நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதனால், தேம்ஸ் நிறுவனம், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவு செய்தது. இதன் ஒருபகுதியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பில், ஆர்டர் உள்ளிட்டவை தொடர்பான சேவையை எளிதாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான மென்பொருள் தயாரிக்கும் ஆர்டரை, விப்ரோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|