தொலை­பே­சியில் ‘இன்­டர்நெட்’ வச­திக்கு எதிர்ப்புதொலை­பே­சியில் ‘இன்­டர்நெட்’ வச­திக்கு எதிர்ப்பு ... ரூபாயின் மதிப்பு ரூ.66.70-ஆக சரிவு ரூபாயின் மதிப்பு ரூ.66.70-ஆக சரிவு ...
வள­மான தொழில் வாய்ப்பு:திரு­மண விழாக்­களை குறிவைக்கும்‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2016
07:25

மும்பை;திரு­ம­ணங்கள் சொர்க்­கத்தில் நிச்­ச­யிக்­கப்­ப­டு­வ­தாக கூறி­னாலும், அவை நடை­பெ­று­வ­தென்­னவோ பூமியில் தான். சிலர், விமா­னத்தில், நீருக்­க­டியில், பறக்கும் பலுானில் கூட, திரு­ம­ணங்­களை நடத்­து­கின்­றனர். எத்­த­கைய திரு­ம­ணங்­க­ளையும், சிறப்­பாக நடத்திக் கொடுக்க, பல நிறு­வ­னங்கள் தயா­ராக உள்­ளன.
திரு­ம­ணத்­திற்­கான, ‘பட்ஜெட்’ எவ்­வ­ளவு என தெரி­வித்து விட்டால் போதும். திரு­மண அழைப்­பிதழ் தயா­ரிப்­பது முதல் கல்­யாணம் முடித்து, மண­மக்­களை தேனி­ல­வுக்கு அனுப்பும் வரை, அனைத்து ஏற்­பா­டு­க­ளையும், இந்­நி­று­வ­னங்கள் பொறுப்­புடன் செய்து தரு­கின்­றன. இத்­த­கைய சேவையில், வலை­தளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் தீவி­ர­மாக கள­மி­றங்கி, வெற்றி கண்டு வரு­கின்­றன.
ஒரு திரு­ம­ணத்­திற்கு, விருந்­தி­னர்­களை அழைப்­பது முதல், அவர்­க­ளுக்கு விருந்து உப­சாரம் செய்து, தாம்­பூலம் கொடுத்து அனுப்­பு­வது வரை­யி­லான பணி­களை, இந்­நி­று­வ­னங்கள் மேற்­கொள்­கின்­றன. இதற்­கான கட்­டணம், 2 லட்சம் ரூபாயில் இருந்து துவங்­கு­கி­றது.திரு­ம­ணத்­திற்கு தேவை­யான அனைத்து சேவை­யா­ளர்­களின் முக­வ­ரி­களை, பல வலை­தள நிறு­வ­னங்கள் வழங்­கு­கின்­றன. வெட்­டிங்பிள்ஸ் வலை­த­ளத்தில், திரு­ம­ணங்­க­ளுக்கு மலர் அலங்­காரம் செய்வோர், அறு­சுவை உணவு தயா­ரிப்போர், மண­மக்­களை அழகுப் பது­மை­க­ளாக மாற்றும் அழகு கலை வல்­லு­னர்கள் உள்­ளிட்­டோரின் முக­வ­ரிகள் இடம் பெற்­றுள்­ளன.
இந்த வலை­த­ளத்தில் நுழைந்து, நம் தேவையை தெரி­வித்து, நமக்கு ஏற்ற, சேவை­யா­ளரை தேர்வு செய்து கொள்­ளலாம். ‘வெட்­மிகுட், வெட்டிங் பிரிகேட்’ போன்ற வலை­த­ளங்கள், முக­வர்­களின் முக­வரி­யுடன், திரு­ம­ணங்­களை திட்­ட­மிடும் வச­தி­யையும் வழங்­கு­கின்­றன. முக­வர்­க­ளிடம் பதிவுக் கட்­ட­ணமும், அவர்கள் திரு­மண வீட்­டா­ரிடம் வசூ­லிக்கும் தொகையில், 10 சத­வீ­தத்­தையும், இந்­நி­று­வ­னங்கள் பெறு­கின்­றன.
வெட்­மிகுட் வலை­த­ளத்தில், 8,500 முக­வர்கள் பதிவு செய்­துள்­ளனர். இது­போன்ற முக­வர்கள் மூலம், 30 லட்­சத்­திற்கும் அதி­க­மானோர் வேலை வாய்ப்பு பெறு­வ­தாக, ஆய்வு தகவல் கூறு­கி­றது. உல­க­ளவில், பொரு­ளா­தார மந்­த­நி­லையால் பாதிக்­கப்­ப­டாத, 4,000 – 5,000 கோடி டாலர் சந்தை மதிப்­புடன், திரு­மண சேவை துறை திகழ்­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)