பதிவு செய்த நாள்
11 மே2016
04:47
மும்பை:கர்நாடகா அரசு, ஹேவல்ஸ் நிறுவனத்திற்கு, 62 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம், மின் விசிறி, விளக்கு உள்ளிட்ட மின் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், கர்நாடகா மாநிலத்தில், புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, கர்நாடகா தொழில் மேம்பாட்டு வாரியம், தும்குர் என்ற இடத்தில் உள்ள வசந்தநரசபுரா தொழில் பகுதியில், 62.09 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து, ஹேவல்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனம், நாடு முழுவதும் தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளது. அசாம் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க தேவையான, நிலம், அனுமதி உள்ளிட்டவை தொடர்பாக, அம்மாநில அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|