‘நிறு­வ­னங்கள் கையில் ஊழி­யர்­களின் ஆரோக்­கியம்’‘நிறு­வ­னங்கள் கையில் ஊழி­யர்­களின் ஆரோக்­கியம்’ ... ரூபாயின் மதிப்பு ரூ.66.79-ஆக சரிவு ரூபாயின் மதிப்பு ரூ.66.79-ஆக சரிவு ...
அமெ­ரிக்கா மீது 16 வழக்­குகள்:இந்­தியா அதி­ரடி முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2016
07:20

புது­டில்லி:‘‘புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி துறையில், உலக வர்த்­தக அமைப்பின் விதி­க­ளுக்கு மாறாக நடக்கும் அமெ­ரிக்கா மீது, விரைவில், 16 வழக்­குகள் தொடுக்­கப்­படும்,’’ என, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில்­துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன், பார்­லி­மென்டில் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது:சூரிய மின்­சக்தி உட்­பட, புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி திட்­டங்கள் சில­வற்றில், உலக வர்த்­தக அமைப்பின் விதி­மு­றை­களை, அமெ­ரிக்கா பின்­பற்­று­வ­தில்லை. குறிப்­பாக, 1994ம் ஆண்டின், வரி மற்றும் வர்த்­தக ஒப்­பந்தம், மானி­யங்கள் மற்றும் எதிர்­வ­ரிகள், வர்த்­தக முத­லீட்டு ஒப்­பந்தம் ஆகி­ய­வற்றில், உலக வர்த்­தக அமைப்பின் விதிகள் மீறப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய விதி­மீ­றல்கள் தொடர்­பாக, அமெ­ரிக்கா மீது, விரைவில், உலக வர்த்­தக அமைப்பில், 16 வழக்­குகள் தொடுக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.
பின்­னணி என்ன?இந்­தி­யாவில், சுற்­றுச்­சூழல் மாசு­பாட்டை கட்­டுப்­ப­டுத்தி, மின் உற்­பத்தி திறனை அதி­க­ரிப்­ப­தற்­காக, புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி திட்­டங்­க­ளுக்கு ஊக்கம் அளிக்­கப்­ப­டு­கி­றது. இந்த வகையில், 2010, ஜன­வரி, 11ல், ஜவ­ஹர்லால் தேசிய சூரிய மின் உற்­பத்தி திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. வரும், 2022க்குள், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்­பத்தி திறனை எட்ட, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தின் கீழ், மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்து, அர­சுக்கு விற்கும் நிறு­வ­னங்கள், குறிப்­பிட்ட அள­விற்கு, உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­படும், ‘சோலார் செல்’ மற்றும் ‘சோலார் தகடு’ ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்த வேண்டும் என, நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.இதற்கு எதிர்ப்பு தெரி­வித்த அமெ­ரிக்கா, ‘இந்­தி­யாவின் நிபந்­தனை, சர்­வ­தேச வணிக கொள்கைக்கு எதி­ரா­னது’ என, உலக வர்த்­தக அமைப்­பிடம் முறை­யிட்­டது.
இந்த நிபந்­த­னையால், 2011 முதல், இந்­தி­யா­விற்­கான சோலார் செல் மற்றும் தக­டுகள் ஏற்­று­மதி, 90 சத­வீதம் குறைந்து விட்­ட­தா­கவும், அமெ­ரிக்கா புலம்­பி­யது. இந்த வழக்கில், இந்­தாண்டு பிப்­ர­வ­ரியில், உலக வர்த்­தக அமைப்பு, அமெ­ரிக்­கா­விற்கு சாத­க­மாக தீர்ப்பு வழங்­கி­யது. அதில், ‘இந்­தி­யாவின் நிபந்­தனை, சர்­வ­தேச வணிக விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ப இல்லை; அமெ­ரிக்க நிறு­வ­னங்­களை பாதிப்­ப­தாக உள்­ளது’ என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
இதை எதிர்த்து, உலக வர்த்­தக அமைப்பில், இந்­தியா மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது. இந்­நி­லையில், உலக வர்த்­தக அமைப்பின் விதி­மு­றை­களை உள்­நாட்­டி­லேயே பின்­பற்­றாத அமெ­ரிக்கா மீது, இந்­தியா, விரைவில் வழக்கு தொடுக்க உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)