பதிவு செய்த நாள்
14 மே2016
07:58
திருவனந்தபுரம் : ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த, ‘ஹாட்ஸ்டார்’ நிறுவனம், மொபைல் போன் மூலம், திரைப்படங்கள், ‘டிவி’ தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், கேரளாவிற்கான விளம்பர துாதராக, மலையாள நடிகர் மோகன்லாலை நியமித்துள்ளது. இதுகுறித்து, தென் மாநிலங்களில், அனைத்து ‘டிவி’, பத்திரிகை மற்றும், ‘டிஜிட்டல்’ ஊடகங்களில், ஆறு வாரங்களுக்கு விளம்பரம் செய்ய, ஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில், எட்டு மொழிகளில், 80 ஆயிரம் மணி நேரத்திற்கும் அதிகமான, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. மலையாளத்தில், 4,000 மணி நேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளை அளிக்கும் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம், பிரேமம், திரிஷ்யம் உட்பட, 150க்கும் அதிகமான மலையாள திரைப்படங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|