பதிவு செய்த நாள்
14 மே2016
08:02
புதுடில்லி : இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, ‘சைமன் கார்ட்டர்’ எனும் டிசைனர் பிராண்டை, இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, ‘ஆதித்ய பிர்லா பேஷன் அண்டு ரீடெய்ல்’ நிறுவனம்.சைமன் கார்ட்டர் நிறுவனம், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட, 40 நாடுகளுக்கு மேல், அந்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆயத்த ஆடைகளை விற்பனை செய்கிறது. இந்த நிலையில், ஆதித்யா பிர்லா நிறுவனம், சைமன் கார்ட்டர் ஆடைகளை, இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஆதித்ய பிர்லா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சைமன் கார்ட்டர் ஒப்பந்தம் மூலம், உலக தரத்திலான ஆயத்த ஆடைகளை, இந்தியாவிற்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சைமன் கார்ட்டர் ஆடைகளை விற்பனை செய்ய, மும்பை, டில்லி, பெங்களூரில் சிறப்பு கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|