பதிவு செய்த நாள்
17 மே2016
07:33

புதுடில்லி : ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், நிப்பான் லைப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, நிப்பான் லைப் நிறுவனம், கடந்த, 2011ம் ஆண்டில், ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், 26 சதவீத பங்குகளை வாங்கியது. இதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின், 49 சதவீத பங்குகள் நிப்பான் நிறுவனத்திடம் இடம்பெயர்ந்தன. இதையடுத்து, ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பெயர், ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் என்று பெயர் மாற்றம் அடைந்தது.தற்போது, இந்த இணைப்பை கவுரவிக்கும் விதமாக, மியூச்சுவல் பண்டு மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றில், புதிய திட்டங்கள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|