பதிவு செய்த நாள்
17 மே2016
07:34

புதுடில்லி : ‘ஆஸ்க்மி கிராசரி’ நிறுவனத்தின், ‘ஆன்லைன்’ மூலமான பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு, 1,800 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்க்மி கிராசரி நிறுவனம், இணையதளம் வாயிலாக, 38 நகரங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்த நிறுவனம் தினமும், 20 ஆயிரம் ‘ஆர்டர்’களை பெற்று வருகிறது. சராசரியாக, 1,900 ரூபாய்க்கான பொருட்களை இதன் வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். இதையடுத்து, இந்நிறுவனம் கூடுதலாக, 45 நகரங்களுக்கு தன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
ஆஸ்க்மி நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவில், இணையதள மளிகை விற்பனையின் சந்தை மதிப்பு, 2018 – 19ம் ஆண்டில், 2.7 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும், இணையதள மளிகை பொருட்கள் விற்பனை, 30 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|