பதிவு செய்த நாள்
17 மே2016
07:36

மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வங்காள விரிகுடாவில், 11 இடங்களில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் குறித்து ஆய்வு செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. அதில், ஒன்பது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூன்று இடங்களில் எண்ணெய் வளம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக கடலோரத்தில், ‘சிஒய் – 111 – டி5’ என்ற பகுதியில், மேலும், எட்டு இடங்களில், எண்ணெய் வளம் குறித்து ஆய்வு செய்ய அனுமதி கோரி, சுற்றுச்சூழல் துறையிடம் ரிலையன்ஸ் விண்ணப்பித்தது. அதை ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் துறை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆய்வுக்கு, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. ‘கடல் வாழ் உயிரினங்களை பாதிக்காமல், உரிய பாதுகாப்பு முறைகளுடன், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என, ரிலையன்சுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|