பதிவு செய்த நாள்
17 மே2016
07:42

புதுடில்லி : ‘மதர் டெய்ரி’ நிறுவனத்தின் விற்றுமுதல், அடுத்த மூன்று ஆண்டுகளில், 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என தெரிகிறது. ‘நேஷனல் டெய்ரி டெவலப்மென்ட் போர்டு’ என்ற தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த, மதர் டெய்ரி நிறுவனம், பால் பொருட்கள், சமையல் எண்ணெய், பழம், காய்கறி, பழச்சாறு விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.சமீபத்தில், ‘பேடிஎம்’ மற்றும் மதர் டெய்ரி நிறுவனம் இணைந்து, நாடு முழுவதும், 100க்கும் மேற்பட்ட, பால் மையங்களில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை வசதியை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளன. தற்போது, பால் மற்றும் பால் பொருட்கள், பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களுக்கு, தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மதர் டெய்ரி நிறுவனம், தன் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதனால், அடுத்த மூன்று ஆண்டுகளில், அந்த நிறுவனத்தின் விற்றுமுதல், 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|