பதிவு செய்த நாள்
19 மே2016
07:02
ஆமதாபாத் : மான்ஸ்டர் நிறுவனம், இந்தியாவில் ஊதிய விகிதம் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில், பணியாளர்கள் ஊதியத்தில், ஆண், பெண் பாகுபாடு நிலவுகிறது. ஓர் ஆண், ஒரு மணி நேரத்திற்கு, சராசரியாக, 288.68 ரூபாய் ஊதியம் பெறுகிறார்; அதே வேலையை செய்யும் பெண்ணுக்கு, 207.85 ரூபாய் மட்டுமே தரப்படுகிறது. ஆய்வில், 75 சதவீத ஊழியர்கள், பணியில் திருப்தி உள்ளதாக கூறியுள்ளனர். ஊதியத்தை பொறுத்தவரை, 55 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர். ஆண், பெண் ஊதிய பாகுபாட்டில், தயாரிப்பு துறை, முதலிடத்தில் உள்ளது. இத்துறையில், 34.9 சதவீதம் ஊதிய வித்தியாசம் உள்ளது. ஊதிய வித்தியாசம், 17.7 சதவீதம் என்ற அளவில், மிகவும் குறைவாக, வங்கி, நிதி, போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, தொலைதொடர்பு துறைகளில் காணப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|