நுகர்வோர் நம்­பிக்­கையில் இந்­தியா முன்­னேற்றம்நுகர்வோர் நம்­பிக்­கையில் இந்­தியா முன்­னேற்றம் ... புதிய ஆல்டோ கார் மாருதி நிறு­வனம் அறி­முகம் புதிய ஆல்டோ கார் மாருதி நிறு­வனம் அறி­முகம் ...
சுல­ப­மாக தொழில் துவங்க... அன்­னிய நேரடி முத­லீ­டுகள் குவிய இந்­தி­யா­வுக்கு அமெ­ரிக்கா யோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2016
07:05

லாஸ் ஏஞ்செல்ஸ் : ‘‘இந்­தியா, அனைத்து துறை­க­ளிலும் நவீன தொழில்­நுட்­பங்­களை புகுத்தி, பொரு­ளா­தார நிர்­வா­கத்தை சீர்­ப­டுத்­தினால், அதன் வர்த்­தகம் மேலும் பெருகும்; அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்குத் தேவை­யான, அன்­னிய நேரடி முத­லீ­டு­களும் குவியும்,’’ என, தெற்கு மற்றும் மத்­திய ஆசிய நாடு­க­ளுக்­கான, அமெ­ரிக்க வெளி­யு­றவு துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் யோசனை தெரி­வித்­துள்ளார்.
இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த நிஷா, கலி­போர்­னியா பல்­க­லையில், மகாத்மா காந்தி நினைவு சொற்­பொ­ழிவு கூட்­டத்தில், மேலும் பேசி­ய­தா­வது: இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான சூழலை உரு­வாக்க வேண்டும். அறி­வுசார் சொத்­து­ரிமை நடை­மு­றை­களை செழு­மைப்­ப­டுத்தி, தொழில்­நுட்பம் மற்றும் கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு போது­மான பாது­காப்பு வழங்க வேண்டும்.
ஒப்பந்தம்ஒரு நிறு­வனம், வரி­களை முன்­கூட்­டியே தீர்­மா­னிக்கக் கூடிய வகையில், வெளிப்­ப­டை­யான, திட­மான நிறு­வன வரிச் சட்­டங்கள் அவ­சியம். வரி தொடர்­பான பிரச்­னை­க­ளுக்கு விரைந்து தீர்வு காணக்­கூ­டிய செயல் திட்­டங்­களை, நடை­மு­றை­ப­டுத்த வேண்டும். இவை தொடர்­பாக, பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அரசு, ஏற்­க­னவே எடுத்த சில நட­வ­டிக்­கை­களால், அன்­னிய முத­லீ­டுகள் இந்­தி­யாவில் குவிந்து வரு­கின்­றன. இருந்­த­போ­திலும், இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான பரஸ்­பர முத­லீட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தாகி, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அம­லுக்கு வந்தால், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, இந்­தியா மீது இன்னும் அதிக நம்­பிக்கை ஏற்­படும். இந்த ஒப்­பந்தம், அமெ­ரிக்­காவின் அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­க­ளையும், நிறு­வ­னங்கள் கடை­பி­டிக்கும் உயர்­த­ர­மான நடை­மு­றை­க­ளையும், இந்­தியா பெறு­வ­தற்கு துணை புரியும்.
கடந்த, 15 ஆண்­டு­களில், இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான பரஸ்­பர வர்த்­தகம், 10 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவில் தான் வளர்ச்சி கண்­டுள்­ளது. இதை, 50 ஆயிரம் கோடி டால­ராக உயர்த்­து­வ­தற்­கான பூர்­வாங்கப் பணிகள் நடை­பெற்று வரு­கின்­றன. மதிப்­பீட்டு காலத்தில், அமெ­ரிக்க நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில், 30 ஆயிரம் கோடி டாலர் முத­லீடு செய்­துள்­ளன.
வேலைவாய்ப்புஇந்­திய நிறு­வ­னங்கள், அமெ­ரிக்­காவில், 1,100 கோடி டாலர் முத­லீடு செய்து, ஒரு லட்சம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்­ளன. பரஸ்­பர வர்த்­தக வளர்ச்­சியால், இரு நாடு­களும் பயன் பெறும். இந்­தி­யாவில், திற­னா­ளி­களின் தேவைக்கும், பங்­க­ளிப்­பிற்கும் அதிக இடை­வெளி உள்­ளது. இதை குறைக்க, திறன் வளர்ச்சி திட்­டங்கள் துணை­பு­ரியும். அதன் மூலம், சர்­வ­தேச போட்­டியை சுல­ப­மாக சமா­ளிக்­கலாம்.மக்­களின் மேம்­பாட்­டிற்கு ஏற்ப, நாட்டின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி காண வேண்டும். அதற்கு, மதம், இனம், பாலின பாகு­பா­டு­களை கடந்து, மக்கள், சமூக, பொரு­ளா­தார, அர­சி­யலில் பங்­க­ளிப்பை வழங்க வேண்டும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)