பதிவு செய்த நாள்
20 மே2016
07:23
பெங்களூரு : அமேசான் இந்தியா நிறுவனம், அதன் வலைதளத்தில், ‘கிராப்டட் இன் இந்தியா’ என்ற பிரிவை துவக்கியுள்ளது. இதில், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நெசவாளர்கள், நேரடியாக, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, ‘இந்தியா ஹேண்ட்லுாம் பிராண்டு’ மற்றும் ‘ஹேண்ட்லுாம் மார்க்’ முத்திரை உள்ள கைத்தறி துணிகளை விற்பனை செய்யலாம். இதற்காக, அமேசான், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், கைத்தறி மேம்பாட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக, ராஜஸ்தானில் உள்ள கோட்டா, மேற்கு வங்கத்தில், நாடியா, ஒடிசாவில், பர்கார், அசாமில், பிஜோய் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்களுக்கு, வலைதளத்தில் விற்பனை செய்வதற்கு, அமேசான் பயிற்சி அளித்து வருகிறது. ‘இதன் மூலம், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்; மக்கள், நம்பகமான கைத்தறி துணிகளை வாங்க முடியும்’ என, அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|